தமிழ்நாடு

யாராலும் அடக்க முடியாத சசிகலாவின் காளை: மோதிரம் பரிசளித்த அமைச்சர்!

Published

on

இன்று நடந்த அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் அதிமுக பொதுச்செயலாளர் என்று கூறப்படும் சசிகலாவின் காளையும் களமிறங்கியது என்பதும் ஆனால் அந்த காளையை யாராலும் அடக்க முடியவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி 700 காளைகள் ஒவ்வொன்றாக அவிழ்த்து விடப்பட்டன என்பது 300 காளையர்கள் அந்த காளைகளை அடக்க போராடினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா வளர்த்த காளையும் இந்த அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் கலந்து கொண்டது. அவருடைய காளை களமிறங்கிய போது அதிமுக பொதுச் செயலாளர் விகே சசிகலாவின் காளை என விழாக்குழுவினர் அறிமுகப்படுத்தினார்.

சசிகலாவின் காளை வாடிவாசலில் இருந்து வந்ததும் ஆவேசமாக ஓடியவர்களை பதம் பார்த்தது என்பதும் அந்த காளையை யாராலும் அடக்க முடியவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து காளையின் சொந்தக்காரரான சசிகலா சார்பில் அமைச்சர் கொடுத்த மோதிரம் பெற்றுக் கொள்ளப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

சசிகலாவின் காளையை யாராலும் அடக்க முடியவில்லை என்ற தகவல் அவரது ஆதரவாளர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version