தமிழ்நாடு

சசிகலா, இளவரசிக்கு முன்ஜாமின்: பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் உத்தரவு!

Published

on

சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இருந்தபோது சசிகலா சட்டத்துக்கு விரோதமாக சொகுசு வாழ்க்கை வாழ்ந்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இந்த வழக்கில் அவருக்கு ஜாமீன் கிடைத்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற சசிகலா சிறையில் இருந்தபோது சொகுசு வாழ்க்கை வாழ்வதற்காக கோடிக்கணக்கில் சிறை அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாக குற்றம் சாட்டப்பட்டது .

இதுகுறித்து பெங்களூர் போலீசார் வழக்கு பதிவு செய்து குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்த நிலையில் இன்று இந்த வழக்கு பெங்களூர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

இந்த விசாரணையின்போது சசிகலா மற்றும் இளவரசி ஆகிய இருவரும் நேரில் ஆஜர் ஆனார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய விசாரணையின்போது பெங்களூரு மத்திய சிறை அதிகாரிக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் சசிகலா மற்றும் இளவரசி ஆகிய இருவருக்கும் முன்ஜாமின் வழங்கி பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

சசிகலா மற்றும் இளவரசி ஆகிய இருவருக்கும் தலா மூன்று லட்சம் ரூபாய் மற்றும் இரண்டு தனி நபர் ஜாமீன் உத்தரவாதம் வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த வழக்கில் தற்போது சசிகலா கைது செய்யப்பட மாட்டார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

 

seithichurul

Trending

Exit mobile version