விமர்சனம்

சேரியில் பிறந்தால் கர்நாடக சங்கீதத்தில் சாதிக்க முடியுமா? சர்வம் தாள மயம் விமர்சனம்!

Published

on

மின்சார கனவு, கண்டுகொண்டேன், கண்டுகொண்டேன் படங்களுக்கு பிறகு நீண்ட இடைவெளி விட்டு இயக்குநர் அவதாரம் எடுத்துள்ள ஒளிப்பதிவாளர் ராஜீவ் மேனனின் தேவை தமிழ் சினிமாவுக்கு தேவை என்பதை மீண்டும் ஆணித்தரமாக சொல்லியிருக்கும் படம் தான் சர்வம் தாள மயம்.

மிருதங்கம் செய்யும் தொழிலாளியின் மகனுக்கு மிருதங்க இசையின் மீது ஏற்படும் ஆர்வமும், அவன் கீழ் சாதி என்பதால், கர்நாடக சங்கீத மேதைகள் அவனை எள்ளி நகையாடுவதும், இசைக்கு மனிதர்கள் மட்டும் குரு அல்ல, இந்த இயற்கையே மிகப்பெரிய குரு என்பதை நாயகி சொல்லும் அழகிலும் படத்தின் தரம் தெள்ளத் தெளிவாக தெரிகிறது.

நானும் நடிக்கிறேன் என இசையமைப்பதை விட்டு தேவையில்லாமல் ஜி.வி. பிரகாஷ் வந்து விட்டார் என்று இனிமேல், இந்த படத்தை பார்த்த பின்னர் யாரும் சொல்ல மாட்டார்கள்.

சர்வம் தாளமயம்

ஒரு சாதாரண இளைஞனின், இசை வெறியை லட்சியக் கனவை காணவும் அடையும் ஏற்படும் துடிப்பை தனது நடிப்பால் சாதித்து காட்டியுள்ளார் ஜி.வி. பிரகாஷ். நிச்சயம் அவரது வாழ்நாள் சிறப்பு படமாகவும் இது தனித்து நிற்கும்.

இசைக்கான கதை இசையமைப்பது ஏ.ஆர். ரஹ்மான் என்றால் இசைக்கு குறை என்று சொல்லமுடியுமா? பின்னணி இசை, பாடல் என்று படத்தின் ஒவ்வொரு அசைவுக்கும் ஏற்ற சர்வ தாளத்தையும் இசையமைத்துள்ளார் இசைப்புயல்.

மிருதங்க சக்கரவர்த்தியாக நெடுமுடி வேணு நிஜத்தில் வாழ்ந்துள்ளார். நீண்ட இடைவெளிக்கு பின்னர் வினித்தும் தனது தனித்துவமான நடிப்பில் அசத்தியுள்ளார்.

இசை நிகழ்ச்சி என்ற பேரில் ரியாலிட்டி ஷோ நடத்தும் டிவி சேனலின் சாயத்தை வெளுக்கச் செய்ததும், அதனை டிடி ஆங்கர் செய்வதும், ராஜீவ் மேனனால் மட்டுமே சாத்தியம்.

ரியல் வாழ்க்கையில் விஜய் ரசிகரான ஜி.வி. பிரகாஷ், படத்திலும் விஜய் ரசிகராக வருவதும் அடுத்த முதல்வர் யார் என்ற கேள்விக்கு விஜய்யின் புகைப்படத்தை காண்பிக்கும் காட்சிகளிலும் விஜய் ரசிகர்கள் தியேட்டரில் படத்தைக் கொண்டாடும் களமாக இயக்குநர் அமைத்துள்ளார்.

மிருதங்க இசையில் நம்பர் ஒன்னாக வரவேண்டும் என்ற பீட்டரின் கனவு நிறைவேறியதா? என்பதை தியேட்டரில் போய் அறிந்து கொள்ளுங்கள்.

சர்வம் தாள மயம் படம் பிப்ரவரி ஒன்றாம் தேதி நாளை ரிலீசாகிறது. ராமின் பேரன்பு, சிம்புவின் வந்தா ராஜாவாதான் வருவேன் போன்ற பலத்த போட்டியும் இந்த பிப்ரவரி முதல் வார ரேசில் யார் ஜெயிக்கப் போகிறார்கள் என்ற கேள்வியையும் கூடவே கூட்டிக் கொண்டு ஓடும் என்பதில் சந்தேகமில்லை.

இதில், இசை பிரியர்களுக்கான பொக்கிஷமாக சர்வம் தாள மயம் இருக்கும் என்பது மட்டும் நிச்சயம்.

சினி ரேட்டிங்: 3.5/5.

seithichurul

Trending

Exit mobile version