சினிமா செய்திகள்

சார்பட்டா பரம்பரை: நெகிழ்ந்துபோய் கருத்து கூறிய உதயநிதி!

Published

on

இயக்குநர் பா.இரஞ்சித்தின் ‘சார்பட்டா பரம்பரை’ திரைப்படம் சில நாட்களுக்கு முன்னர் அமேசான் ஓடிடி தளத்தில் வெளியானது. சார்பட்டா வெளியானது முதல் பல்வேறு தரப்பினரின் பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் பெற்று வருகிறது. இந்நிலையில் திமுக எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலினும் சார்பட்டா பரம்பரைப் படத்தை நெகிழ்ச்சியுடன் பாராட்டி பேசியுள்ளார்.

சார்பட்டாவில் வரும் ரங்கன் வாத்தியார் கேரக்டர் ஒரு திமுக உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் படம், 1970 எமர்ஜென்ஸி காலக்கட்டத்தில் எடுக்கப்பட்டதால் அது குறித்தப் பல்வேறு அரசியல் நிகழ்வுகளும் பதிவு செய்யப்பட்டிருக்கும்.

இது பற்றி உதயநிதி, ’70-களின் பின்னணியில் குத்துச்சண்டை விளையாட்டை மையப்படுத்தி வெளிவந்துள்ள ’சார்பட்டா பரம்பரை’ முக்கியமான திரைப்படம். அந்த காலத்தில் இருந்த அரசியல் நெருக்கடி நிலையையும், அதை கழகம் – கலைஞர் – கழக தலைவர் எதிர்கொண்ட விதத்தையும் கதையோடு காட்சிப்படுத்தியிருப்பது சிறப்புக்குரியது.

கபிலனாக அசத்தியுள்ள நண்பர் ஆர்யா, கழகத்துக்கார்-ரங்கன் வாத்தியாராக பசுபதி சார், டான்ஸிங் ரோஸ், வேம்புலி, ஜான் விஜய் என ஒவ்வொரு கதாபாத்திரங்களையும் கதையில் வாழ செய்துள்ள நண்பர் இயக்குநர் பா.இரஞ்சித்துக்கும், ஒட்டுமொத்த படக்குழுவுக்கும் வாழ்த்துகள்’ எனக் கூறியுள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version