சினிமா செய்திகள்

’சார்பாட்டா பரம்பரை’ வெற்றியின் சைட் எபெக்ட் இதுதான்: நடிகை கஸ்தூரி டுவிட்

Published

on

ஆர்யா நடிப்பில், பா ரஞ்சித் இயக்கத்தில் உருவான ’சார்பாட்டா பரம்பரை திரைப்படம் சமீபத்தில் வெளியான நிலையில் இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் அரசியல் பிரபலங்கள், திரையுலக பிரபலங்கள் உள்பட அனைவரும் இந்த படத்தை கொண்டாடி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது

கடந்த சில ஆண்டுகளாக வரிசையாக தோல்வி படங்கள் கொடுத்து வந்த ஆர்யாவுக்கு இந்த படத்தால் அவருடைய திரையுலக வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனை ஏற்பட்டு உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இந்த படத்தின் ஆர்யா வெற்றியை ரசித்துக் கொண்டிருந்த நிலையில் திடீரென ஜெர்மனி பெண் வித்ஜா என்பவர், ஆர்யா மீது பணமோசடி புகார் அளித்தார். ஆர்யா தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ரூபாய் 71 லட்சம் பணம் பெற்றதாகவும் தற்போது அவர் திருமணம் செய்துகொள்ள மறுப்பதாகவும் அவர் புகார் அளித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த புகார் குறித்து பதிலளிக்க சிபிசிஐடி கால அவகாசம் கேட்டதை அடுத்து இந்த வழக்கை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இந்த வழக்கு குறித்து திரையுலக பிரமுகர்கள் பலர் தங்களது கருத்துக்களை தெரிவித்து வரும் நிலையில் நடிகை கஸ்தூரி தனது டுவிட்டர் பக்கத்தில் ’சார்பாட்டா பரம்பரை படத்தின் வெற்றியின் சைடு எபெக்ட்தான் இது என்று குறிப்பிட்டு உள்ளார். அவர் தனது டுவிட்டரில் மேலும் இதுகுறித்து கூறியிருப்பதாவது

சார்பட்டா பரம்பரையின் மிகப்பெரிய வெற்றியின் எதிர்பாராத சைட் எஃபெக்ட் இதுதான். ஆர்யா உண்மையிலேயே வந்துவிட்டார் என்பதற்கு இதுபோன்ற சில சர்ச்சைகள்தான் உறுதியான சான்று என பதிவிட்டுள்ளார்.”

seithichurul

Trending

Exit mobile version