விமர்சனம்

‘சார்ப்பட்டா பரம்பரை’ விமர்சனம்!

Published

on

வட சென்னையில் இருக்கும் சார்ப்பட்டா பரம்பரை, இடியாப்ப பரம்பரைக்கும் இடையே நடக்கும் குத்துச் சண்டைப் போட்டியில் யார் யார் வென்றார்கள் என்ற ஒற்றை வரியை வைத்துக்கொண்டு ஹீரோ எப்படி வெற்றி பெற்றார் என்ற வழக்கமான ஸ்போர்ட்ஸ் டைப் படம் தான் இந்த சார்ப்பட்டா பரம்பரை.

ஸ்போர்ட்ஸ் படம் எப்படித் தொடங்குமோ அப்படித் தொடங்குகிறது. எப்படி இடைவேளை இருக்குமோ அப்படியே இருக்கிறது எப்படி க்ளைமாக்ஸ் இருக்குமோ அப்படியே இருக்கிறது. ஆனாலும், இது நிச்சயம் பார்க்க வேண்டிய கொண்டாடப்பட வேண்டிய படம் ஏன்?

70களின் தொடக்கத்தில் எமர்சென்சி காலத்தில் நடக்கிறது படம். கலையின் மூலம் ராமமூர்த்தி அந்தக் காலத்திற்கே நம்மை அழைத்துச் சென்றிருக்கிறார். பாக்ஸிங் செட், அதற்கான போஸ்டர், வடச் சென்னை மணிக்கூண்டு, வீடுகள் வீட்டில் உள்ளே, வெளியே இருக்கும் சுவர் படங்கள் முதற்கொண்டு அட்டகாசமாக அமைத்திருக்கிறார் அதற்காக… கபிலன், மாரியம்மாள், ரங்கன் வாத்தியார், பாக்கியம், வெற்றிச் செல்வன், டாடி, ராமன், டான்சிங் ரோஸ், வேம்புலி, தணிகை என ஒவ்வொரு பாத்திரமும் அதற்கான வேலைகளைக் கச்சிதமாகச் செய்திருக்கிறார்கள். எந்தக் கதாபாத்திரமும் தேமே என்று உருவாக்கப்படவில்லை. அதிலும் டான்சிங் ரோஸ் மற்றும் டாடி இரண்டு கதாபாத்திரங்களும் அட்டகாசமாக அமைத்திருக்கிறார்கள்.

டான்சிங் ரோஸ் கூட ஒரு சண்டை இருக்கும் அந்த பத்து நிமிடமும் அட்டகாசம். ரங்கனாகப் பசுபதி செம்மையாக பிட் ஆகியிருக்கிறார். இரண்டாம் பாதியில் வரும் பீடி குஸ்தி வாத்தியாரும் அட்டகாசம். அதுமட்டுமல்ல அவர் மூலம் சொல்லப்படும் ஒவ்வொரு வசனங்களும் சூப்பராக வந்திருக்கிறது. இப்படி கதாபாத்திரங்களை உருவாக்கியதும் அதற்கான ஆட்கள் தேர்வும் சிறப்பாக அமைந்திருக்கிறது அதற்காக…

தனக்கு உரிய ஏரியாவில் மீண்டும் இறங்கி அடித்திருக்கிறார் பா.ரஞ்சித், சின்ன சின்ன அரசியல் செயல்கள் முதல் முழு நீளப் படம் முழுவதும் மெட்ராஸ் ஸ்டைல் ரஞ்சித் தெரிகிறார். அத்தனை இடங்களிலும் வசனங்களிலும் ரஞ்சித்தின் மெனக்கெடல் தெரிகிறது. இதற்கு மிகப்பெரிய பலம் சந்தோஷ் நாராயணன் இசை. பாடல்கள் பெரிய அளவில் இல்லை என்றாலும் பின்னணி மற்றும் பிஜிஎம்-இல் கலக்கியிருக்கிறார். கடையில் வரும் மோட்டிவேசன் ராப் பாடலும் ச.நா. ஸ்டைல். ரஞ்சித்தின் மீண்டும் ஒரு வெற்றிப்பட வரிசையில் நிச்சயம் இந்தப் படம் இருக்கும். தியேட்டரில் பார்த்திருக்க வேண்டியது. என்ன செய்ய கொரோனா நம் மூஞ்சியிலேயே பாக்ஸிங் பஞ்ச் விட்டுவிட்டது.

குறைகளே இல்லையா என்றால் முதல் பாராவோடு இதை வேண்டுமானால் சேர்த்துக்கொள்ளலாம். படத்தின் நீளம் மற்றும் ஆர்யாவின் சில இடங்களில் இருக்கும் செயற்கைத்தனமான நடிப்பு. ஆனாலும்கூட ஆர்யாதான் இதற்குப் பொருத்தமாக இருந்திருப்பார். சார்ப்பட்டா பரம்பரையைப் பார்க்க ஒரு டிக்கெட் எடுத்துடுங்க… அமேசான் ப்ரைமில் வெளியாகியிருக்கிறது..

seithichurul

Trending

Exit mobile version