தமிழ்நாடு

‘சார்பட்டா பரம்பரை’ வசனம்- கலைஞர் கருணாநிதி பேஸ்புக் பக்கத்தில் வெளியான வைரல் வீடியோ!

Published

on

சார்பட்ட பரம்பரை திரைப்படத்தில் திமுக ஆட்சி கலைக்கப்பட்ட எமெர்ஜென்ஸி கால காட்சிகள் இடம் பெற்றிருக்கும். இந்த வசனங்களை வைத்து ‘கலைஞர் கருணாநிதி’ ஃபேஸ்புக் பக்கத்தில் ‘திமுக அன்றும் இன்றும்’ என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

நடிகர் ஆர்யா நடிப்பில் நேற்று அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியான திரைப்படம் ‘சார்பட்டா பரம்பரை’. இந்தப் படம் 1970-களில் நடப்புது போன்ற கதைக்களத்தை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. மிகுந்த பாராட்டுகளைப் பெற்று வரும் இந்தப் படத்தில் எமெர்ஜென்ஸியின் போது மத்திய அரசால் திமுக ஆட்சி கலைக்கப்பட்டது. அப்போது மிசா சட்டம் கொண்டு வரப்பட்டு பலரும் அந்தச் சட்டத்தின் கீழ் கைதானது வரலாறு.

இந்த வரலாற்று நிகழ்வு சார்பட்டா திரைப்படத்தில் ஒரு அங்கமாக வந்திருக்கும். அந்த வசனத்தை அப்போது என்ன நடந்தது என்பது குறித்து ‘அன்றும் இன்றும் என்றும் திமுக’ என்ற தலைப்பின் கீழ் மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் ஃபேஸ்புக் பக்கத்தில் ஒரு வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

இந்த வீடியோ தான் தற்போது சமுக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Trending

Exit mobile version