சினிமா செய்திகள்

இடியாப்பா பரம்பரை வாத்தியாரையும் சைக்கிளில் ஏற்றிச் சுத்துவோம்- வேம்புலி, டான்ஸிங் ரோஸ் அலப்பறைகள்

Published

on

சார்பட்டா பரம்பரை வாத்தியாரை மட்டும் தான் கபிலன் சைக்கிளில் ஏற்றிக் கொண்டு சுத்துவானா? எங்க இடியாப்பப் பரம்பரை வாத்தியாரையும் நாங்கள் சைக்கிளில் ஏற்றிச் சுற்றுவோம் என வேம்புலியும் டான்ஸிங் ரோஸ்-ம் மாஸ் காட்டி உள்ளார்கள்.

பா.ரஞ்சித் இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகி ஹிட் ஆன திரைப்படம் சார்பட்டா. இந்தப் படத்தில் கபிலன் கதாபாத்திரத்தில் நடித்து இருக்கும் ஆர்யா தனது வாத்தியாரான பசுபதியை சைக்கிள் ஏற்றிக் கொண்டு செல்வார். இந்தக் காட்சி கடந்த ஒரு வாரமாகவே மீம்ஸ்களாக வைரல் ஆகி வருகிறது.

இதனால், நாங்களும் எங்க வாத்தியாரை ஏற்றிச் சுத்தி வைரல் ஆவோம் என இடியாப்ப பரம்பரையின் வேம்புலி மற்றும் டான்ஸிங் ரோஸ் கதாபாத்திரங்களில் நடித்த ஜான் கொக்கேன் மற்றும் ஷபீர் துரைக்கண்ணு வாத்தியாராக நடித்த ஜி.எம்.சுந்தரை தெரு தெருவாக சைக்கிளில் ஏற்றிக் கொண்டு சுற்றி வருகின்றனர்.

Trending

Exit mobile version