சினிமா செய்திகள்

பிரபாஸ், சிரஞ்சீவியை அடுத்து தோல்வியை கவ்விய மகேஷ்பாபு: சர்காரு வாரி பாட்டா மொக்கையா?

Published

on

தமிழ் திரைப்படங்கள் எல்லாம் வசூல் செய்வதே இல்லை அண்டை மாநிலங்களான தெலுங்கு மற்றும் கன்னட திரைப்படங்களில் மட்டுமே நல்ல வசூல் செய்கின்றன என்று ஒரு தரப்பினர் கூறி வருகின்றனர். ஆனால் ஆர்.ஆர்.ஆர்., புஷ்பா ஆகிய படங்களை தவிர எந்த தெலுங்கு படங்களும் சமீபத்தில் வெற்றி பெறவில்லை. அதேபோல் கேஜிஎப் 2 தவிர சமீபத்தில் வெளியான எந்த கன்னட படமும் வெற்றி பெறவில்லை.

இந்த நிலையில் சமீபத்தில் வெளியான பிரபாஸின் ராதே ஷ்யாம், சிரஞ்சீவியின் ஆச்சார்யா ஆகிய திரைப்பட தோல்வியை சந்தித்த நிலையில் தற்போது மகேஷ்பாபுவின் ர்காரு வாரி பாட்டா திரைப்படமும் மோசமான விமர்சனங்களை பெற்றிருக்கிறது.

மகேஷ்பாபு கீர்த்தி சுரேஷ் தமன் மற்றும் கொரடலா சிவா ஆகிய நான்கு பிரபலங்கள் இந்த படத்தில் இணைந்து இருந்தபோதிலும் இந்த படத்திற்கு ரசிகர்கள் பெரும் ஆதரவை காட்ட வில்லை .

இந்த படம் ரிலீசாகி முதல் நாள் முதல் காட்சி முடிந்தவுடன் இந்த படத்திற்கு ஏகப்பட்ட எதிர்மறை விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றன, பழைய கதை என்றும் எந்த விதமான புதிய முயற்சியும் இல்லை என்றும் மகேஷ்பாபு நன்றாக நடித்திருந்தாலும் அவருக்கு படத்தின் திரைக்கதை ஒத்டுழைக்கவில்லை என்றும் கீர்த்தி சுரேஷ் படுமோசமாக காட்சி அளிக்கிறார் என்று கொரட்டலா சிவாவின் திரைக்கதை பீஸ்ட் படத்தை விட மோசமாக இருக்கிறது என்றும் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர் .

இதனை அடுத்து இந்த படமும் வசூல் அளவில் படுதோல்வி அடையவே வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் மகேஷ் பாபு மற்றும் அவரது தரப்பினர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

 

Trending

Exit mobile version