சினிமா

சர்கார் முதல் நாள் வசூல் இத்தனை கோடியா?

Published

on

சர்கார் படத்தின் முதல் நாள் வசூல் 50 கோடி ரூபாயை கடந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பாக்ஸ் ஆபிஸ் கிங் நான் தான் என மீண்டும் விஜய் நிரூபித்துள்ளார். விஜய் நடிப்பில் தீபாவளி தினமான நேற்று வெளியான சர்கார் படம் முதல் நாளில் தமிழ்நாடு முழுவதும் 32 கோடி ரூபாய் வசூலித்து புதிய சாதனையை படைத்துள்ளது என்றும், தியேட்டரில் விற்கும் பாப்கார்ன், குளிர்பானங்கள் உள்பட மொத்தம் சர்கார் திரைப்படத்தால் 50 கோடி ரூபாய்க்கும் மேல் நேற்று வசூல் செய்துள்ளதாக பாஃப்டா நிறுவனர் மற்றும் தயாரிப்பாளரான தனஞ்செயன் அறிவித்துள்ளார்.

24 ஏஎம் ஸ்டூடியோஸ் தயாரிப்பாளரான ஆர்.டி. ராஜாவும் படம் மாபெரும் வசூலை குவித்துள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த வாரம் முழுவதும் படம் இதே ஸ்பீடில் ஓடினால், 200 கோடி ரூபாய் வரை வசூலை ஈட்டும் என கணித்துள்ளனர்.

 

Trending

Exit mobile version