சினிமா

அதிக விலைக்கு விற்கும் சர்கார் டிக்கெட்டுகள்!

Published

on

சர்கார் படம் நாளை ரிலீசாகிறது. சர்கார் படத்தின் டிக்கெட்டுகள் அதிக விலைக்கு விற்பனை செய்யக் கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் பகீரங்க எச்சரிக்கை விடுத்தும், மல்டி சினி பிளக்ஸ் உட்பட பல தியேட்டர்களும் டிக்கெட்டுகளின் விலையை குறைந்த பட்சம் 500 ரூபாய்க்கும், அதிக பட்சம் 10,000 ரூபாய்க்கும் ஒரு டிக்கெட்டை விற்பனை செய்வதாக புகார்கள் எழுந்துள்ளன.

புக் மை ஷோ, டிக்கெட் க்ரீன் உள்ளிட்ட வெப்சைட்டுகள் கடந்த மூன்று நாட்களாக முடக்கப்பட்டு, டிக்கெட்டுகளை ஆன்லைனில் விற்காமல், தியேட்டரில் நேரடியாக அதிக விலைக்கு விற்க தியேட்டர் ஓனர்கள் முடிவெடுத்திருப்பது, கோர்ட் உத்தரவை அவமதிக்கும் செயலாக மாறியுள்ளது.

ரஜினியை தொடர்ந்து நடிகர் விஜய்க்கு இப்படி ஒரு மாஸ் ஓபனிங் என சினிமா வட்டாரங்கள் சிலாகித்து வருகின்றன.

 

Trending

Exit mobile version