சினிமா செய்திகள்

சர்கார் டீஸர் ரிலீஸ் தேதி தெரியுமா?

Published

on

சென்னை: முருகதாஸ் இயக்கத்தில், விஜய் மூன்றாவது முறையாக இணைந்துள்ள படம் சர்கார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். வில்லியாக வரலஷ்மி சரத்குமார் நடிக்கிறார். மேலும், ராதா ரவி, பழ. கருப்பையா போன்ற ஜாம்பவான்களும் உள்ளனர்.

படத்தின் இசை வெளியீட்டு விழா, அக்டோபர் 2ஆம் தேதி, காந்தி ஜெயந்தி அன்று, தாம்பரத்தில் உள்ள சாய்ராம் கல்லூரியில் திருவிழாவாக நடந்தது. இந்நிகழ்ச்சியில், விஜய் பேசிய பேச்சுக்கள், அரசியல் களத்தில், விவாத பொருளாகவே மாறியது.

விஜய்க்கு ஆதரவாகவும், எதிராகவும், கருத்து கூறி படத்தை ஹிட்டாக்க விரும்பவில்லை என்றும் அரசியல்வாதிகள் வரிந்து கட்டினர். இந்நிலையில், படத்தின் டீஸர் ரிலீஸ் தேதி குறித்த தகவல் கிடைத்துள்ளது.

வரும் ஆயுத பூஜை பண்டிகையன்று சர்கார் படத்தின் டீஸர் ரிலீசாகும் என்பதே அந்த தகவல். இதுவரை சன் பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்றாலும், தீபாவளிக்கு இன்னும் ஒரு மாத காலமே உள்ளதால், அந்த தேதியை குறி வைக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version