சினிமா

விஜயதசமிக்கு ரிலீசாகிறது சர்கார் டீஸர்!

Published

on

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில், விஜய் நடித்துள்ள சர்கார் படத்தின் டீஸர் வரும் விஜயதசமிக்கு ரிலீசாகவுள்ளது.

ஏ.ஆர். முருகதாஸ் கூட்டணியில், துப்பாக்கி, கத்தி படத்திற்கு பிறகு மூன்றாவது முறை விஜய் இணைந்துள்ள படம் சர்கார். வரும் தீபாவளிக்கு படம் திரைக்கு வரவுள்ளது. இந்நிலையில், படத்தின் டீஸர் வரும் அக்டோபர் 19ஆம் தேதி மாலை 6 மணிக்கு ரிலீசாகவுள்ளது என சர்கார் படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன்பிக்சர்ஸ் தற்போது அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

சர்கார் படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷும், வில்லியாக வரலட்சுமி சரத்குமாரும் நடித்துள்ளனர். நிஜ அரசியல்வாதியான பழ.கருப்பையா இப்படத்தில் அரசியல்வாதியாகவே நடித்துள்ளார். ராதாரவி, யோகிபாபு உள்ளிட்ட பலரும் இப்படத்தில் நடித்துள்ளனர். ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். பாடலாசிரியர் விவேக், அனைத்து பாடல்களையும் எழுதியுள்ளார்.

author avatar
seithichurul

Trending

Exit mobile version