சினிமா செய்திகள்

தமிழக சர்க்காருக்கு அடிபணிந்த விஜயின் சர்கார்..!

Published

on

விஜய் நடிப்பில் தீபாவளி சிறப்பாக வெளியான சர்கார் திரைப்படத்தில் ஆளும் கட்சி அதிமுக எதிராகவும், ஜெயலலிதா புகழுக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் கருத்துக்கள் உள்ளதாகப் போராட்டம் வெடித்த நிலையில் சர்ச்சைக்குறிய காட்சிகளை நீக்குவதாகப் படக்குழுவினர் உறுதி அளித்துள்ளனர்.

சர்கார் திரைப்படம் வெளியானது முதல் அதிமுக அமைச்சர்கள் விஜய் மற்றும் தயாரிப்பாளரை விமர்சித்து வந்த நிலையில் தீபாவளி பண்டிகை முடிந்த அனைவரும் அவர்களது வேலையைப் பார்த்து திரும்பியதை அடுத்துச் சர்கார் வெளியான திரை அரங்குகளையும் முற்றுகையிட்டு அதிமுகப் போராட்டம் நடத்தி வருகிறது.

இதனால் வியாழக்கிழமை மாலை முதல் தமிழகத்தில் சர்கார் திரைப்படம் வெளியாகிய அனைத்துத் திரை அரங்குகளிலும் காட்சிகளை ரத்து செய்யப்பட்டுள்ளது.

மேலும் சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்பட்டு வெள்ளிக்கிழமை பிற்பகல் முதல் சர்கார் படம் மீண்டும் திரைக்கு வரும் என்று தகவல்கள் கூறுகின்றன.

author avatar
seithichurul

Trending

Exit mobile version