சினிமா செய்திகள்

வருடம் முழுக்க டிவிட்டரில் கெத்து காட்டிய விஜய்.. 2018ன் டாப் 10 டிரெண்டிங்கில் சுவாரசியம்!

Published

on

சென்னை: 2018 ஆண்டில் இந்தியாவில் அதிகம் டிரெண்டான ஹேஷ்டேக்குகளை டிவிட்டர் வெளியிட்டு இருக்கிறது.

ஒவ்வொரு வருடமும் டிவிட்டர் அந்த வருடம் வைரலான ஹேஷ்டேக்குகள் குறித்த அறிவிப்பை வருட இறுதியில் வெளியிடும். இதை வைத்தே அந்த வருடம் மக்கள் எதைப்பற்றி அதிகம் பேசி இருக்கிறார்கள் என்று தெரிந்து கொள்ள முடியும்.

அந்த வகையில் தற்போது வெளியாகி உள்ள சிறந்த டிரெண்டிங் ஹெடேக்குகளின் பட்டியல் பல ஆச்சர்யத்தை தாங்கி இருக்கிறது. இந்த முறை தென்னிந்தியா தொடர்பான விஷயங்களே அதிகம் வைரலாகி உள்ளது.

இந்த டிரெண்டில் இந்தியாவிலேயே முதல் இடம் பிடித்து விஜயின் சர்கார் படம் சாதனை படைத்து இருக்கிறது. இந்தியாவில் #Sarkar தான் 2018ல் வைரல் ஆன நம்பர் ஹேஷ்டேக். அதேபோல் சர்கார் ஹேஷ்டேக்தான் அதிக விவாதத்தை ஏற்படுத்திய ஹேஷ்டேக் என்றும் கூறப்பட்டுள்ளது.

 

seithichurul

Trending

Exit mobile version