விமர்சனம்

காசு வாங்காம ஓட்டு போடனும்.. ‘சர்கார்’ விமர்சனம்!

Published

on

மெர்சல் படத்துல அரசியல் கொஞ்சமா இருந்துச்சு.. சர்கார் படத்துல அரசியல் மொத்தமா அரசியல்வாதிகள மொத்துற அளவுக்கு இருந்துச்சுன்னு தான் சொல்லணும்..

விஜய் பண்ற ஒரு விரல் புரட்சி, நிஜத்துல நடக்காதா என மக்கள் ஏங்குற அளவுக்கு இருக்கு.

கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சையை மனசு வச்சிட்டு விஜய்யோட கதாபாத்திரத்தை ஏ.ஆர். முருகதாஸ் வடிவமைத்திருக்கிறார். படத்தில் விஜய்யின் பெயரும் சுந்தர் தான்.

தன்னோட ஓட்ட போடுறதுக்கு விஜய் சென்னை வருகிறார்.. அவர் ஓட்ட யாரோ கள்ள ஓட்ட போட்டுட்டாங்க.. தமிழ்நாட்டு சிஎம் ஆக கரு. பழனியப்பா துணை முதல்வரா ராதாரவியும் இருக்காங்க.. விஜய் தன்னோட பவர வச்சி கோர்ட்டுக்கு போய்.. ரீ – எலக்‌ஷன் வர வைக்கிறாரு… ரீ எலக்‌ஷன்லையும் முதல்வர் b துணை முதல்வர் ஆட்சியை பிடிக்க மக்களுக்கு பணம் கொடுக்கறது.. ஆட்கள வச்சி விஜய்யை காலி பண்ண ட்ரை பண்றது.. விஜய் மக்களை ஒன்று திரட்டி.. ஓட்டுக்கு காசு வாங்காம.. தேர்தல்ல உங்க ஊரு தலைவர தேர்ந்தெடுங்க என ஒரு விரல் புரட்சியை செய்ற இடங்கள்ல மாஸ் கிளாஸ்னு.. தன்னோட கரிஷ்மாவையும் ஃபுல் எனர்ஜியோட சிமிட்டாங்காரான.. விஜய் ஒன் மேன் ஆர்மியா சர்கார் நடத்துறாரு.

Sarkar Review In Tamil

பழ கருப்பையா, ராதாரவி கேரக்டர்.. தமிழ்நாட்டு அரசியலை அப்படியே பிரதிபலிக்கிறது. இதனால படத்துக்கு பிரச்னை கூட வரலாம்… ஆனா.. அது சர்காருக்கு விளம்பரமா தான் மாறும்.. ஏன்னா.. தளபதி அவ்ளோ மாஸ். வரலட்சுமி சரத்குமார் கேரக்டர்.. அப்படியே ஒருத்தர ஞாபகம் படுத்தும்.. அத நான் ரிவீல் பண்ண விரும்பல.. நீங்களே நேர்ல போய் பாருங்க.. கீர்த்தி சுரேஷ் கத்தி படத்துல சமந்தா கேரக்டர் போல.. லூசுத்தனமான அதே பழைய டைப் கேரக்டர்.. நடிகையர் திலகத்துக்கு இன்னும் கொஞ்சம் பவர் கொடுத்துருக்கலாம்.. யோகிபாபுவோட இன்ட்ரோ தளபதி இன் ட்ரோவாட பயங்கர மாஸா இருக்கு.. ஆனா.. அப்புறம் எங்கயோ காண போய்ட்ராரு..

சண்டை இயக்குநர்கள் ராம் லக்‌ஷ்மனுக்கு நிச்சயம் இந்த அதிரடி ஸ்டண்ட்டுகளுக்காக பல விருதுகள் கிடைக்கும்.. தளபதி ஒவ்வொரு காட்சிகளிலும் செம ரிஸ்க் எடுத்து செமயா பண்ணிருக்காரு..

ஏ.ஆர். ரஹ்மான் இசையில.. ஒருவிரல் புரட்சி உணர்ச்சியை தூண்டுது.. டாப் டக்கரு பாட்டு செம மாஸ் காட்டுது..

sarkar

படத்தோட மைனஸ்:

ஃபர்ஸ்ட் ஆஃப் கொஞ்சம் லேக் ஆகுது ஃபர்ஸ்ட் கீயர்லயே படம் நகருது.. இன்டர்வெலுக்கு முன்னாடி வர 20 நிமிஷத்துல இருந்து படம் 2,3னு டாப் கியருக்கு எகிறுது.

காசு வாங்காம ஓட்டு போடணுங்கற நல்ல கருத்தை மையமா வச்சி சர்கார் படம் உருவாகியிருக்கு.. கதை திருட்டு பிரச்னைகள் எல்லாம் படத்தை ஒண்ணும் பண்ணல. கந்துவட்டி கொடுமை பிரச்னையில ஒரு குடும்பம் கலெக்டர் ஆபிஸ்க்கு முன்னாடி தீக்குளிச்ச சம்பவம் நெஞ்சை பதறவைக்கிறது. உண்மையை உரக்க சொல்லுது.

மொத்தத்துல சர்கார் தீபாவளி சரவெடிதான்!

சர்கார் மார்க்: 55/100.

Trending

Exit mobile version