சினிமா செய்திகள்

விஜய்யின் ‘சர்கார்’ பட வழக்கு: சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Published

on

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் கடந்த 2018ம் ஆண்டு தீபாவளி தினத்தில் வெளியான திரைப்படம் ‘சர்கார்’. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி உள்பட பலர் நடித்துள்ள திரைப்படம் 110 கோடியில் தயாராகி 250 கோடி வரை வசூல் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த படத்தில் அரசின் இலவச திட்டங்கள் குறித்து சர்ச்சைக்குரிய காட்சிகள் இருப்பதாக கூறி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் தன்னை கைது செய்யாமல் இருக்க ஏஆர் முருகதாஸ் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்படுவதாக சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது. சென்சார் செய்த திரைப்படத்தை தடை செய்ய உத்தரவு பிறப்பிக்க முடியாது என்று இந்த தீர்ப்பில் நீதிமன்றம் கூறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

‘சர்கார்’ திரைப்படத்தில் அரசின் இலவச திட்டங்களை கடுமையாக விமர்சனம் செய்தும் அரசு கொடுத்த இலவச பொருட்களை தூக்கி எறிவது போன்ற காட்சிகள் இருந்ததால் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வழக்கு நடந்து கொண்டிருந்த போது தன்னை கைது செய்யாமல் இருப்பதற்காக ஏஆர் முருகதாஸ் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் பெற்றார் என்பதும், தற்போது இந்த வழக்கு முடிவுக்கு வந்துள்ளதை அடுத்து ஏஆர் முருகதாஸ் கிடைத்த வெற்றியாகவே கருதப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version