சினிமா

சர்கார் வெற்றி விழா கொண்டாட்டத்திலும் சர்ச்சை!

Published

on

சர்கார் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியான போது, விஜய் புகைப்பிடிப்பதாக சர்ச்சை எழுந்தது. மேலும், படத்தின் பெயர் பாலிவுட்டில் அமிதாப்பச்சன் நடித்த சர்கார் என்ற சர்ச்சையையும் எழுந்தது.

பின்னர் சர்கார் படம் தன்னுடைய கதை என வருண் ராஜேந்திரன் என்பவர் ஐகோர்ட் வரை சென்று பின்னர், பெட்டி பெட்டியாக பணத்தை வாங்கிக் கொண்டு சமரசம் அடைந்து விட்டார். அவர் சொன்னது போல, அவருடைய பெயர் படத்தின் டைட்டில் கார்டில் இடம்பெறாததே இதற்கு சாட்சியாகி உள்ளது.

அடுத்த பிரச்சனையாக படத்தில் அதிமுக அரசின் இலவச மிக்ஸி, கிரைண்டர்களை தீயிட்டு கொளுத்தும் காட்சி மற்றும் ஜெயலலிதாவின் இயற்பெயரான கோமளவள்ளி பெயரை வில்லிக்கு வைத்திருப்பது போன்ற சர்ச்சைகள் கிளம்பின. பின்னர், அந்த காட்சிகள் படத்தில் இருந்து மறு தணிக்கை செய்யப்பட்டன.

இந்நிலையில், ஞாயிறன்று 6 நாள் படத்தின் வசூல் 200 கோடி ரூபாயை தாண்டியதாக தகவல்கள் வெளியாகின. மேலும், படத்தின் வெற்றி கொண்டாட்டத்தை படக்குழு கேக் வெட்டி கொண்டாடியது. இதில், நடிகர் விஜய் கலந்து கொண்டார். இந்த வெற்றிக் கொண்டாட்டத்தில் வெட்டப்பட்ட கேக்கில், இலவச மிக்ஸி, கிரைண்டர் வடிவங்கள் அமைக்கப்பட்டு வெட்டப்பட்டது தற்போது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அதிமுக அரசை வேண்டுமென்றே சன் பிக்சர்ஸ், ஏ.ஆர். முருகதாஸ் மற்றும் விஜய் எதிர்ப்பதாக அதிமுகவினர் சர்ச்சையை கிளப்பியுள்ளனர். இதற்கு படக்குழு என்ன காரணம் கூறி சமாளிக்கப் போகிறது என்பது தெரியவில்லை.

 

seithichurul

Trending

Exit mobile version