சினிமா செய்திகள்

‘சரவணா ஸ்டோர்ஸ்’ அண்ணாச்சி நடிக்கும் படத்தின் ஷூட்டிங் ஆரம்பித்தது; வெளியான ‘ஆக்ஷன்’ வைரல் ஸ்பாட் போட்டோஸ்!

Published

on

சரவணா ஸ்டோர்ஸ் கடையின் உரிமையாளரான அண்ணாச்சி அருள், சென்ற ஆண்டு புதிய படத்தைத் தயாரித்து நடிக்க ஆயத்தமானார். ஆனால், கொரோனா காரணமாக படப்பிடிப்புப் பாதியிலேயே நிறுத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் அந்தப் படத்தின் ஷூட்டிங் மீண்டும் ஆரம்பித்துள்ளது. இது குறித்தான வைரல் புகைப்படங்கள் பலரால் பகிரப்பட்டு வருகிறது. 

கடந்த சில ஆண்டுகளாக அண்ணாச்சி அருள், தமிழ்த் திரையுலகின் முன்னணி ஹீரோயின்களுடன் தன் கடையின் விளம்பரப் படங்களில் நடித்து வந்தார். குறிப்பாக ஹன்சிகாவுடன் அவர் நடித்த விளம்பரப் படம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

இதைத் தொடர்ந்து சினிமாக்களில் நடிக்கும் ஆசை அண்ணாச்சி அருளுக்கு ஏற்பட்டது. இதையடுத்து வட இந்திய மாடலான ரித்திகா திவாரி அண்ணாச்சிக்கு ஜோடி போட்டு நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார். விவேக், பிரபு போன்றவர்களுக்கும் படத்தில் முக்கிய கதாப்பாத்திரங்கள் கொடுக்கப்பட்டன. படத்தில் முதலாவதாக சுமார் 10 கோடி ரூபாய் செலவில் செட் போடப்பட்டு பாடல் காட்சிகள் எடுக்கப்பட்டன. இதையடுத்து தான், மொத்த ஷூட்டிங்கும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. 

இந்நிலையில் தற்போது மீண்டும் தொடங்கியுள்ள படத்தின் ஷூட்டிங்கில், முதலாவதாக சண்டைக் காட்சிகள் படம் பிடிக்கப்பட்டன. அது குறித்தான வைரல் புகைப்படங்கள் இதோ.

seithichurul

Trending

Exit mobile version