தமிழ்நாடு

கேட்டது கிடைக்கவில்லை என்றால் 3வது அணி: சரத்குமார் அதிரடி

Published

on

அதிமுக கூட்டணியில் நாங்கள் கேட்ட தொகுதி கிடைக்கவில்லை என்றால் மூன்றாவது அணி அமைப்போம் என அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாமக மற்றும் பாஜக ஆகிய கட்சிகள் ஏற்கனவே அதிக தொகுதிகளை கேட்டுக் கொண்டிருக்கும் நிலையில் சரத்குமார் இன்று செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தார்

அப்போது அவர் அதிமுக கூட்டணியில் ஒரு சீட்டு, ரெண்டு சீட்டுக்களை கொடுத்தால் அந்த தொகுதிகளை நாங்கள் பெற மாட்டோம் என்றும் ஒரு சில தொகுதிகளில் மட்டும் போட்டியிடுவதற்கு நாங்கள் கட்சி நடத்தவில்லை என்றும் நாங்கள் கேட்கும் தொகுதிகளை தராவிட்டால் மூன்றாவது அணி அமைப்போம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்

மூன்றாவது அணியை அமைத்து தலைமை ஏற்கும் தகுதி தனக்கு இருப்பதாகவும் மக்கள் தங்களை ஏற்றுக் கொள்வார்கள் என்றும் அவர் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதிமுக கூட்டணியில் பாமகவிற்கு 40 தொகுதிகளும், பாஜகவிற்கு 34 தொகுதிகளும் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் சரத்குமாரின் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி மற்றும் விஜய்காந்த்தின் தேமுதிக ஆகிய கட்சிகள் அந்த கூட்டணியில் இடம்பெறுமா? அப்படியே இடம்பெற்றாலும் அவர்கள் எதிர்பார்த்த தொகுதிகள் கிடைக்குமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்

Trending

Exit mobile version