தமிழ்நாடு

கமல்ஹாசனை முதல்வர் வேட்பாளராக ஏற்று கொண்ட சரத்குமார்: கூட்டணி பேச்சுவார்த்தை ஆரம்பம்!

Published

on

ஒரு பக்கம் அதிமுக மற்றும் திமுக தங்களது கூட்டணி கட்சிகளுடன் கூட்டணி தொகுதி உடன்பாடு குறித்து பேச்சுவார்த்தைகளை நடத்தி கொண்டிருக்கும் நிலையில், இன்னொரு பக்கம் சத்தமில்லாமல் கமல்ஹாசன் புதிய கூட்டணி ஒன்றை உருவாக்கியுள்ளார்.

கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் கூட்டணியில் சரத்குமாரின் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி ஏற்கனவே இணைந்துள்ளது. அதேபோல் பாரிவேந்தரின் ஐஜேகே கட்சியும் இணைந்து உள்ளது என்பதை பார்த்தோம்.

இந்த நிலையில் தற்போது மக்கள் நீதி மய்யம் கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக கமல்ஹாசனை நடிகர் சரத்குமார் ஏற்றுக் கொண்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இதனை அடுத்து இரு கட்சிகளுக்கும் இடையிலான தொகுதி உடன்பாடு குறித்த ஒப்பந்தங்கள் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் விரைவில் எந்தெந்த தொகுதிகள் எந்த கட்சிக்கு என்பது குறித்த முடிவு எடுக்கப்படும் என்றும் தெரிகிறது.

கமல்ஹாசனை முதல்வர் வேட்பாளராக ஏற்றுக் கொள்ளும் கட்சிகள் மட்டுமே கூட்டணியில் இணைக்கப்படும் என ஏற்கனவே மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் அறிவிக்கப் பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version