சினிமா செய்திகள்

விஜய் தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என 25 வருடங்களுக்கு முன் கணித்தேன்: பிரபல நடிகர்

Published

on

சூப்பர் ஸ்டார் ரஜினியை அடுத்து தமிழ் திரையுலகின் வசூல் சக்கரவர்த்தியாக விஜய் உள்ளார் என்ற நிலையில் இதனை 25 வருடங்களுக்கு முன்பே நான் கணித்தேன் என பேட்டி ஒன்றில் நடிகர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.

தளபதி விஜய் நடிக்க இருக்கும் ’தளபதி 66’ திரைப்படத்தில் விஜய்யின் தந்தையாக சரத்குமார் நடிக்க உள்ளார். இந்த நிலையில் சமீபத்தில் ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு பேட்டி அளித்த சரத்குமார் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்னர் சூரியவம்சம் திரைப்படத்தின் வெற்றி விழாவில், ‘விஜய் தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என நான் தெரிவித்திருந்தேன் என்றும் இதனை தளபதி66 படத்தின் பூஜையின்போது விஜய்யிடம் கூறினேன் என்றும், அவரும் அதனை ஞாபகம் வைத்து இருந்தார் என்றும் தெரிவித்தார்.

25 வருடங்களுக்கு முன்பே விஜய் தான் அடுத்த சூப்பர் ஸ்டாராக வருவார் என்று சரத்குமார் கணித்து இருந்த இந்த தகவல் தற்போது ஆச்சரியத்தை அளித்துள்ளது. இந்த நிலையில் ’தளபதி 66’ படத்தின் படப்பிடிப்பு இந்த மாதம் தொடங்கி ஆகஸ்ட் வரை நடைபெறவிருப்பதாகவும், இந்த படத்தின் கதை அனைத்து தரப்பினரும் ரசிக்கும் வகையில் இருக்கும் என்றும் சரத்குமார் மேலும் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

 

seithichurul

Trending

Exit mobile version