இந்தியா

பொதுவேட்பாளராக போட்டியிட சரத்பவார் மறுப்பு: அடுத்த பலியாடு யார்?

Published

on

ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளரை நிறுத்த எதிர்க்கட்சிகள் முயற்சித்து வரும் நிலையில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக போட்டியிட சரத்பவார் மறுத்து விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தகவலை மம்தா பானர்ஜி மற்றும் டி ஆர் பாலு ஆகியோர் உறுதி செய்துள்ளனர்.

இந்தியா முழுவதும் பல மாநிலங்களில் ஆட்சி செய்து வரும் பாஜக, மக்களவை மற்றும் மாநிலங்களவையிலும் பெரும்பான்மையான உறுப்பினர்களுடன் உள்ளது. எனவே வரும் குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக போட்டியிடும் வேட்பாளர் வெற்றி பெறுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. அதுமட்டுமின்றி அதிமுக உள்பட ஒருசில கூட்டணி கட்சிகளுடன் பாஜக வேட்பாளருக்கு ஆதரவு தெரிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் மம்தா பானர்ஜி உள்பட எதிர்கட்சி அரசியல் தலைவர்கள் பொது வேட்பாளரை நிறுத்த திட்டமிட்டுள்ள நிலையில் சரத்பவார் தான் போட்டியிட மறுத்து விட்டதாக தகவல் வெளியாகி உள்ளன. இதனை அடுத்து பாஜக வேட்பாளர் உடன் மோதும் பலியாடு யார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

 

seithichurul

Trending

Exit mobile version