சினிமா செய்திகள்

த்ரிஷாவுக்காக ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் இருந்து விலகினாரா சந்தோஷ் பிரதாப்?

Published

on

த்ரிஷாவுக்காக ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் இருந்து நடிகர் சந்தோஷ் பிரதாப் விலகியதாக கூறப்படும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நடிகை த்ரிஷா நடித்து முடித்துள்ள பொன்னியின் செல்வன் உள்பட 4 படங்கள் திரைக்கு வெளியாக தயாராக உள்ளது. இந்த நிலையில் தற்போது ’தி ரோடு’ என்ற திரைப்படத்தில் நடிக்க த்ரிஷா ஒப்பந்தமாகியுள்ளார்.

அறிமுக இயக்குனர் அருண் வசீகரன் என்பவர் இந்த படத்தை இயக்க இருப்பதாக பிரபல இசையமைப்பாளர் சாம் சி எஸ் இந்த படத்திற்கு இசையமைக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப்படத்தின் கதை மதுரையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த சாலை விபத்தில் சம்பந்தப்பட்ட கதை என்று கூறப்படுகிறது. இதனால் இந்த படத்தின் படப்பிடிப்பை இரண்டு மாதங்கள் மதுரையில் படப்பிடிப்பு நடத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

இந்த படத்தில் முக்கிய வேடத்தில் சந்தோஷ் பிரதாப் நடிக்கவிருக்கிறார். சமீபத்தில் ‘குக் வித் கோமாளி’ என்ற நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட சந்தோஷ் பிரதாப், இந்த படத்திற்காக தான் நிகழ்ச்சியில் இருந்து விலகியதாக கூறப்படுகிறது.

 

seithichurul

Trending

Exit mobile version