சினிமா செய்திகள்

சந்தோஷ் நாராயணன் வெளியிட்ட ‘கபிலன் – ரங்கன் வாத்தியார்’ சைக்கிள் டிரிப்!

Published

on

ஆர்யா நடிப்பில் பா.இரஞ்சித் இயக்கத்தில் அமேசான் பிரைம் தளத்தில் சில நாட்களுக்கு முன்னர் வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்றுள்ள திரைப்படம் சார்பட்டா பரம்பரை.

குத்துச் சண்டையை மையமாக வட சென்னை பின்புலத்தில் எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்துக்கு பல தரப்பினரும் பாராட்டுகளைத் தெரிவித்து உள்ளனர். இந்த திரைப்படத்தில் அதிமுகவுக்கு எதிராகவும், அதன் முன்னாள் பொதுச் செயலாளரான தமிழ்த் திரையுலகின் சூப்பர்ஸ்டார் எம்.ஜி.ஆருக்கு எதிராகவும் சில காட்சிகள் இருந்ததாக சர்ச்சை கிளம்பியது.

எது எப்படியோ படம் ஹிட் அடித்துவிட்டது. குறிப்பாக கபிலனாக நடித்திருகுகம் ஆர்யாவுக்கும், ரங்கன் வாத்தியாராக வாழ்ந்திருக்கும் பசுபதிக்கும் இடையிலான கெமிஸ்ட்ரிக்கு நல்ல ரீச் கிடைத்துள்ளது. குறிப்பாக அவர்கள் இருவரும் சைக்கிளில் உரையாடி செல்லும் ஒரு காட்சி மீம் கன்டென்டாக மாறியுள்ளது.

அவற்றில் சில வைரல் மீம் இதோ:

இந்நிலையில் சார்பட்டா படத்தில் இசையமைப்பாளரான சந்தோஷ் நாராயணன் அவர் பங்குக்கு ‘கபிலன் – ரங்கன் வாத்தியார்’ காம்போ போட்டோ ஒன்றை ரிலீஸ் செய்து அதகளப்படுத்தி உள்ளார்.

Trending

Exit mobile version