சினிமா செய்திகள்

‘அந்தாதூன்’ தமிழ் ரீமேக் திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை!

Published

on

அந்தாதூன் திரைப்படத்தின் தமிழ் ரீமேக் திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமமைப்பாளராக ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் தபு, ராதிகா ஆப்தே, ஆயுஷ்மான் உள்ளிட்ட பலர் நடித்து 2018 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் அந்தாதூன். இந்தப் படம் வசூல் ரீதியாகவும், கருத்தியல் ரீதியாகவும் நல்ல வெற்றி பெற்றது. மக்களிடையே நல்ல வரவேற்பையும் பெற்றது.

இந்த நிலையில், அந்தாதூன் திரைப்படமானது தமிழ் மொழியிலும் ரீமேக் செய்யப்படுகிறது. ரீமேக் படத்தை தியாகராஜன் இயக்க, பிரசாந்த ஹீரோவாக நடிக்கிறார். இந்தப் படமானது இசையுடன் கலந்த படம் என்பதால், படத்தின் இசையமைப்பாளர் யார் என்ற எதிர்பார்ப்பு கிளம்பியது.

தற்போது அந்தாதூன் தமிழ் ரீமேக் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசைமையப்பாளராக ஒப்பந்தம் ஆகியுள்ளார். மேலும், கதைக்களம்படி பிரசாந்த் பியானோ வாசிக்க வேண்டியதாக உள்ளது. இதற்காக சந்தோஷ் நாராயணன் பியானோ இசை நோட்களை பிரசாந்துக்கு அனுப்பியுள்ளார்.

பிரசாந்த பியானோ வாசித்து பயிற்சி பெற்று வருகிறார். படத்தில் நடிகை சிம்ரனும் ஒப்பந்தமாகியுள்ளார். அடுத்த மாதம், அதாவது ஜனவரியில் படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

seithichurul

Trending

Exit mobile version