சினிமா செய்திகள்

சந்தானத்தின் அடுத்த படம் ஏ1!

Published

on

நடிகர் சந்தானம் நடிப்பில் அண்மையில் வெளியான தில்லுக்கு துட்டு 2 படம் அவருக்கு நல்ல வரவேற்பையும் வசூலையும் வாரிக் கொடுத்துள்ளது.

இந்நிலையில், தனது அடுத்த படத்தின் அறிவிப்பை நடிகர் சந்தானம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

A1 அக்யூஸ்ட் நம்பர் 1 என்ற தலைப்பில் உருவாகவுள்ள இந்த படத்தின் இரண்டு போஸ்டர்களையும் சந்தானம் வெளியிட்டுள்ளார்.

ஜான்சன் எனும் அறிமுக இயக்குநர் இயக்கும் இந்த படத்தின் போஸ்டர்கள் கலர்ஃபுல்லாக அமைந்துள்ளன. ஒரு போஸ்டரில் ஏ1 என்ற எழுத்தின் மேல் சந்தானம் நிற்பது போன்றும், இன்னொரு போஸ்டரில் ஏகே 47 துப்பாக்கிகள் பேக்ரவுண்டில் சந்தானம் படுத்திருப்பது போன்றும் உள்ளன. மிகவும் யங் லுக்கில் சந்தானம் இருப்பது அவரது ரசிகர்களுக்கு ஸ்பெஷல் ட்ரீட் தான்.

இந்த படம் வரும் கோடை விடுமுறைக்கு வெளியாகும் எனவும் படக்குழு இப்போதே அறிவித்து விட்டது. எல்லாம் ஓகே, அந்த சர்வர் சுந்தரம் எப்போ வரும் சந்தானம்?

Trending

Exit mobile version