சினிமா செய்திகள்

3 மாதத்துக்கு ஒரு படம் என வெளியாகும் போலிருக்கே!- அடித்து நொறுக்கும் சந்தானம்

Published

on

நடிகர் சந்தானம் அடுத்தடுத்து நடித்து வரும் படங்களின் பட்டியலைப் பார்த்தால் 2021-ம் ஆண்டு மூன்று மாதத்துக்கு ஒரு படம் என வெளியாகும் போல் உள்ளது.

நடிகர் சந்தானம் நடிப்பில் தீபாவளிக்கு வெளியான திரைப்படம் பிஸ்கோத். கொரோனா ஊரடங்குக்குப் பின்னர் நேரடித் தமிழ் படமாக வெளியான முதல் படம் பிஸ்கோத். அடுத்ததாக பாரிஸ் ஜெயராஜ் என்னும் படத்தில் நடித்து முடித்துள்ளார் சந்தானம். அடுத்ததாக டிக்கிலோனா திரைப்படமும் வெளியீட்டுக்குத் தயாராக உள்ளது.

தொடர்ந்து நடித்துத் தள்ளும் சந்தானத்தின் பெயர் சூட்டப்படாத படம் ஒன்றை அறிமுக இயக்குநர் ஸ்ரீநிவாச ராவ் இயக்குகிறார். இத்திரைப்படத்தில் புதுமுகம் ஒருவர் நாயகி ஆக அறிமுகம் ஆகிறார். இவர்களுடன் எம்.எஸ்.பாஸ்கர், சாயாஜி ஷிண்டே ஆகியோரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இத்திரைப்படம் முழுவதும் குடும்பங்கள் கொண்டாடும் படங்களாகவே வெளியாகும் எனத் தெரிகிறது.

seithichurul

Trending

Exit mobile version