சினிமா செய்திகள்

சந்தானம் நடித்த ‘டிக்கிலோனா’ சென்சார் சான்றிதழ் தகவல்!

Published

on

சந்தானம் நடித்த ‘பாரிஸ் ஜெயராஜ்’ என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியானது என்பதும் இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் சந்தானம் நடித்த அடுத்த திரைப்படமான ‘டிக்கிலோனா’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது சென்சாருக்கு சென்றது. இந்த படத்தை பார்த்த சென்சார் அதிகாரிகள் படத்திற்கு ‘யு’ சான்றிதழ் அளித்துள்ளனர். இதனை அடுத்து இந்த படத்தின் ரிலீஸ் தேதி இன்னும் ஒரு சில நாட்களில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என்று தெரிகிறது. அனேகமாக தேர்தல் முடிந்தவுடன் இந்த படம் ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முதல்முறையாக சந்தானம் இந்த படத்தில் மூன்று வேடங்களில் நடித்துள்ளார். கார்த்திக் யோகி என்பவர் இயக்கியுள்ள இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா மற்றும் இளைய இசைஞானி யுவன் சங்கர் ராஜா ஆகிய இருவரும் இணைந்து இசையமைத்துள்ளனர். இந்தப் படத்தில் கமல்ஹாசன் நடித்த ‘மைக்கேல் மதன ராஜன்’ என்ற படத்தில் இடம்பெற்ற ‘பேர் வச்சாலும் வைக்காம’ என்ற பாடல் ரீமிக்ஸ் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version