சினிமா

சண்டகோழி 2 படம் தெலுங்கில் நல்ல வசூல்

Published

on

சண்டகோழி 2 படம் லிங்கு சாமி இயக்கத்தில் விஷால் நடித்துள்ளார். இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாகக் கீர்த்திச் சுரேஷ் நடித்துள்ளார். வரலட்சுமி, ராஜ்கிரண் மற்றும் பலர் நடித்துள்ளார்கள். இப்படத்தின் இருந்து பாடல்கள், டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்திய நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

“சண்டகோழி 2“ படம் கடந்த வாரம் வெளியானது. இது தெலுங்கில் “பந்தம் கோடி 2“ என்ற தலைப்பில் அதே நாளில் வெளியானது. சண்டகோழி முதல் பாகம் அளவிற்கு இந்தப் படம் இல்லை என்று பேசப்பட்டாலும் ,தெலுங்கில் மிகப் பெரிய வெற்றியை கொடுத்துள்ளது.

தெலுங்கில் இதுவரை விஷால் நடித்து வெளிவந்த படங்களிலேயே இந்தப் படத்தின் தான் வசூல் மிக அதிகம் என்கிறார்கள். நான்கு நாட்களில் மட்டும் சுமார் 9கோடி வசூலித்து அதில் 5கோடியை பங்குத் தொகையாகக் கொடுத்துள்ளது. இப்படத்தை வாங்கிய அனைவருக்கும் அதிக லாபம் உறுதியாகக் கிடைக்கும் எனக் கூறப்படுகிறது.

ஆனால், தமிழில் முதல் நாளில் மட்டும் ரூ.4 கோடிக்கு அதிகமாக வசூல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழில் இப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியைப் பெறவில்லை என்றாலும் நல்ல வசூலைக் கொடுத்து வருகிறது. தமிழ் தெலுங்கு இரண்டிலும் சேர்த்து இப்படம் வெற்றிப் படமாக இருக்கின்றது.

 

seithichurul

Trending

Exit mobile version