சினிமா செய்திகள்

பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த தளபதி விஜய்யின் நண்பர்!

Published

on

பிக்பாஸ் வீட்டில் ஏற்கனவே இந்த வாரம் அமீர் என்ற டான்ஸ் மாஸ்டர் வைல்ட்கார்டு போட்டியாளராக உள்ளே நுழைந்தார் என்பதை பார்த்தோம். இந்த நிலையில் சற்று முன்னர் தளபதி விஜய்யின் நெருங்கிய நண்பர்களில் ஒருவர் வைல்ட்கார்டு போட்டியாளராக உள்ளே நுழைந்து உள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சி 18 போட்டியாளர்களுடன் தொடங்கியது என்பதும், ஒரு போட்டியாளர் தானாக வெளியேறி விட்டார் என்பதும், 6 போட்டியாளர்கள் இதுவரை வெளியேறி உள்ளனர் என்பதும் தெரிந்ததே. இதில் வெளியேற்றப்பட்டு போட்டியாளரான அபிஷேக் மீண்டும் ரீ என்ட்ரி ஆகி உள்ளார் என்பதும் அதேபோல் டான்ஸ் மாஸ்டர் அமீர் வைல்ட் கார்ட் என்ட்ரி ஆக உள்ளே வந்துள்ளார் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் இன்று காலை வெளியான முதல் புரமோவில் மீண்டும் ஒரு போட்டியாளர் உள்ளே வருவது போன்ற காட்சி இருந்தது பார்வையாளர்களுக்கும் சக போட்டியாளர்களுக்கும் பெரும் ஆச்சரியத்தை தந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சற்று முன் வெளியான இரண்டாவது புரமோவில் தளபதி விஜய்யின் நெருங்கிய நண்பர்களில் ஒருவரும் தொலைக்காட்சி நடிகருமான சஞ்சீவ் உள்ளே வந்துள்ளார். அவரை சக போட்டியாளர்கள் வரவேற்கின்றனர் என்பதும், சஞ்சீவ் அனைவரிடமும் நலம் விசாரித்து வரும் காட்சிகள் உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சிபி சஞ்சீவிடம், ‘விஜய் சார் பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்க்கின்றாரா? என்ற கேள்வியை கேட்கிறார். இந்த கேள்விக்கு சஞ்சீவ் என்ன பதில் சொல்லி இருப்பார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

 

Trending

Exit mobile version