சினிமா செய்திகள்

சனி அண்ணேவா.. சனியனேவா! மாரி2 காமெடி புரமோ ரிலீஸ்!

Published

on

மாரி 2 படம் நாளை உலகமுழுவதும் ரிலீசாகிறது. இந்த படத்தில் இடம்பெற்றுள்ள ரோபோ சங்கரின் காமெடி புரமோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

சனிக்கிழமை எனும் கதாபாத்திரத்தில் ரோபோ சங்கர் நடித்துள்ளார். மேலும் தனுஷிடம் அடிவாங்கும் இடிதாங்கி கதாபாத்திரத்தில் வினோத் நடித்துள்ளார்.

தற்போது வெளியிடப்பட்டுள்ள காமெடி புரமோவில், சனிக்கிழமை என்ற தனது பெயருக்கு விளக்கம் தரும் ரோபோ சங்கர், எல்லாரும் என்னை சனி.. சனி என தான் கூப்பிடுவாங்க.. ஆனா? இடிதாங்கி மட்டும் தான் என்ன சனி அண்ணே.. சனி அண்ணே என கூப்பிடுவான் எனக் கூற,

ரோபோவின் அருகே வரும் இடிதாங்கியும் சனி அண்ணே எனக் கூறிவிட்டு, போகும் போது.. சனியனே என கூப்பிட்டு நக்கல் காமெடியில் ரசிகர்களை சிரிக்கவைத்துள்ளார்.

சனி அண்ணாவுக்கும், சனியனேவுக்கும் ஒரு புள்ளி தான் வித்தியாசம். அந்த புள்ளிய அவன் வச்சானா என ரோபோ சங்கர் யோசிப்பதெல்லாம் மிகச் சிறப்பாக அமைந்துள்ளது.

நிச்சயம் இந்த வார படங்களில் மாரி 2 மற்றும் சிலுக்குவார்பட்டி சிங்கம் படங்கள் காமெடிக்கு கேரண்டி.

seithichurul

Trending

Exit mobile version