சினிமா

திடீர் இடம் மாற்றம் சர்கார் படத்தின் இசை விழா!

Published

on

விஜய் நடிக்கும் சர்கார் படத்தின் கொண்டாட்டங்கள் துவங்கி உள்ளது. படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி சர்ச்சைகளைச் சந்தித்த நிலையில் இருக்கும்.இப்படத்தின் இசை வெளியீடு செம்டம்பர் 24ம் தேதி என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், இப்போது செப்டம்பர் 24-ம் தேதி சர்கார் படத்தின் சிங்கிள் டிராக் வெளியாகிறது. அதையடுத்து, அக்டோபர் 2ம் தேதி சர்கார் படத்தின் இசை வெளியீடு நடைபெறுகிறது.

இந்த நிகழ்ச்சியில் ரஜினி கலந்து கொள்வதாகக் கூறப்படுகிறது. சென்னை, நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெறுவதால் கூறப்படும் வந்த இப்பட இசை வெளியீட்டு விழா, தற்போது சென்னை திருவான்மியூரில் உள்ள ராமச்சந்திரா கன்வென்சன் சென்டரில் நடைபெறுவதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

சர்கார் படம் தீபாவளிக்குத் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Trending

Exit mobile version