சினிமா செய்திகள்

ஹீரோவாகும் சாண்டி.. கை கோர்க்கும் பிக்பாஸ் பிரபலங்கள்!

Published

on

மானாட மயிலாட நடன நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் சாண்டி. இப்போது நடன இயக்குநராக வளம் வரும் சாண்டி பிக்பாஸ் போட்டியில் பங்கேற்ற பிறகு முதல் முறையாக ஹீரோவாக ஒரு படத்தில் நடிக்க உள்ளார்.

சாண்டி ஹீரோவகும் படத்தில் பிக்பாஸ் பிரபலங்களான சித்தப்பு சரவணன், ரேஷ்மா உள்ளிட்டவர்களும் இணைந்து நடிக்க உள்ளனர். அறிமுக இயக்குநர் சந்துரு என்பவர் இந்த படத்தை இயக்குகிறார். த்ரில்லர் கதையம்சம் கொண்ட இந்த படத்தில் சாண்டி முதல் முறையாக ஹீரோவாக நடிக்கிறார்.

மர்மமான முறையில் நடக்கும் ஒரு கொலை, அதன் பின்னணி மற்றும் காரணங்கள் என்ன என்று கண்டு பிடிக்கும் நாயகன். இதுதான் இந்த படத்தின் கதை என்று கூறப்படுகிறது.

மேலும் இந்த படத்தில் ரமா, மைம் கோபி உட்பட பல்வேறு நட்சத்திரங்கள் நடிக்க உள்ளதாகத் தகவல்கள் கூறுகிறன. இயக்குநர் சந்துருவின் சகோதரி இந்த படத்தைத் தயாரிக்க உள்ளார். படத்திற்கு இன்னும் பெயர் முடிவாகவில்லை என்றும், விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்றும் தகவல்கள் கூறுகின்றன.

seithichurul

Trending

Exit mobile version