சினிமா செய்திகள்

சனம்ஷெட்டியின் புதிய காதலர்: பிக்பாஸ் அனிதா வாழ்த்து!

Published

on

பிக்பாஸ் சீசன் 4 போட்டியாளர்களில் ஒருவரான சனம் ஷெட்டி சூப்பராக விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென எதிர்பாராத வகையில் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். இருப்பினும் அவருக்கு பிக்பாஸ் டைட்டில் வின்னர் ஆரிக்கு இணையாக ரசிகர்கள் குவிந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பிக்பாஸ் சீசன் 3 போட்டியாளர்களில் ஒருவரான தர்ஷனுக்கும் சனம்ஷெட்டிக்கும் காதல் இருந்தது என்பதும் ஆனால் அந்த காதல் விரைவில் முடிவடைந்ததாக கூறப்பட்டது. இதனை அடுத்து ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டிய நிலையில் தர்ஷன் தன்னை ஏமாற்றி விட்டதாக காவல்துறையில் சனம்ஷெட்டி புகார் அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் காதலர் தினத்தில் தன்னுடைய புதிய காதலரை சனம்ஷெட்டி தனது சமூக வலைத்தளத்தில் அறிமுகம் செய்து ’என்னுடைய வாழ்வில் ஒளியேற்றி வைத்தவருடன் காதலர் தினத்தில் டின்னர் சாப்பிடுகிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார். இந்த புகைப்படத்தில் சனம்ஷெட்டி காதலரின் கை மட்டும் தெரிந்தாலும் தனது புதிய காதலர் அவர் தான் என்பதை சனம்ஷெட்டி உறுதி செய்துள்ளதாக தெரிகிறது.

இதனை அடுத்து அனிதா சம்பத் உள்பட பிக்பாஸ் போட்டியாளர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளனர். சனம் ஷெட்டியின் புதிய காதலர் யார்? அவர் ஒரு நடிகரா அல்லது தொழில் அதிபரா என்பதை அவரே விரைவில் தெரிவிப்பார் என்றும் அதுவரை பரவிவரும் வதந்திகளும் நம்பவேண்டாம் என்றும் சனம்ஷெட்டி தரப்பினர் தெரிவித்துள்ளனர்

Trending

Exit mobile version