சினிமா செய்திகள்

ஒரே நேரத்தில் ராஜமவுலி, ஷங்கர் படங்களில் நடிக்கும் சமுத்திரகனி!

Published

on

இந்தியன் 2 படத்தில் முக்கியமான ரோலில் நடிக்க நடிகர் சமுத்திரகனி ஒப்பந்தமாகியுள்ளார்.

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் உருவான நண்பன் படத்தில் சத்தியராஜ் ஒரு முக்கிய வேடத்தில் நடித்து அசத்தியிருப்பார். அதன் பின்னர், ராஜமவுலி இயக்கத்தில் உருவான பாகுபலி படத்தில் சத்யராஜுக்கு கட்டப்பா கதாபாத்திரம் என்ற கவுரவம் வழங்கப்பட்டது.

அதே போலவே தற்போது ராஜமவுலி இயக்கத்தில் உருவாகி வரும் ஆர். ஆர். ஆர். படத்தில் நடித்து வரும் சமுத்திரகனி, அடுத்து, ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தியன் 2 படத்தில் கமலின் நண்பராக நடிக்க கமீட் ஆகியுள்ளார்.

காலா படத்தில் ரஜினியுடன் நடிக்கும் வாய்ப்பு சமுத்திரகனிக்கு கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version