தொழில்நுட்பம்

மிகக்குறைந்த விலையில் 4ஜிபி ரேம் ஸ்மார்ட்போன்.. வெறித்தனமாக களம் இறங்கும் சாம்சங்!

Published

on

ஸ்மார்ட்போன் தயாரிப்பில் முன்னனி நிறுவனமான சாம்சங், தற்போது மிகக்குறைந்த விலையில் 4ஜிபி ரேம் கொண்ட ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்கிறது.

சாம்சங் நிறுவனம் தற்போது புதிய வரவாக கேலக்ஸி எம் 02 எஸ் என்ற மாடலை ஜனவரி 7அம் தேதி முதல் அறிமுகப்படுத்த உள்ளது. இந்த இது தொடர்பான விவரங்ககளை  சாம்சங் இந்தியா வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்துள்ளது. அதன்படி கிடைத்த தகவலின்படி, இதன் விலை ருபாய் 10000த்திற்குள் இருக்கும் என்றும், இதில் 4ஜிபி ரேம் என்றும் தெரிகிறது. ரெட்மி நிறுவனம் அடுத்தடுத்து பட்ஜெட் ஸ்மார்ட்போன்களை களம் இறக்கியுள்ள நிலையில், அதனை எதிர்கொள்ளும் வகையில் சாம்சங்கும் எம்02 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்கிறது.

இதிலுள்ள சிறப்பு அம்சங்கள்:
ரேம்: 4 ஜிபி
இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 10 ஓஎஸ்
டிஸ்ப்ளே: 6.5 இன்ச் எச்டி + இன்ஃபினிட்டி வி டிஸ்ப்ளே
பேட்டரி: 5,000 எம்ஏஎச்
கேமரா அமைப்பு: 13 மெகாபிக்சல் மெயின் சென்சார் கேமரா, 2 மெகாபிக்சல் சென்சார்களுடன் ட்ரிபிள் ரியர்

Trending

Exit mobile version