தொழில்நுட்பம்

7000 mAh திறன் கொண்ட பேட்டரியுடன் வெளியான சாம்சங் கேலக்ஸி F62 – அட்டகாசமான சிறப்பம்சங்கள்!

Published

on

சாம்சங் நிறுவனத்தின் அடுத்த அட்டகாசமான ஸ்மார்ட் போன் வெளியிடப்பட்டுள்ளது. சாம்சங் கேலக்ஸி F62 எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த போனில், டூயல் நானோ சிம், ஆண்ட்ராய்டு 11 இயங்குதளம், 6.7 இன்ச் முழு ஆமோலெட் டிஸ்ப்ளே, எக்ஸினோஸ் 9825 எஸ்.ஓ.சி ப்ராசஸர், 8 ஜிபி ரேம், 64 மெகா பிக்சல் முதன்மை கேமரா, 12 மெகா பிக்சல் இரண்டாம் நிலை கேமரா, ஒரு அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா, 5 மெகா பிக்சல் மேக்ரோ கேமரா உள்ளிட்ட சிறப்பம்சங்களைப் பெற்றுள்ளது. செல்ஃபிகளுக்கு என்று 32 மெகா பிக்சல் கொண்ட கேமரா கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த போனில் 6 ஜிபி ரேம், 128 ஜிபி சேமிப்பு வசதி கொண்ட வகை, 23,999 ரூபாய்க்கு விற்கப்படும். 8 ஜிபி ரேம், 128 ஜிபி சேமிப்பு வசதி கொண்ட வகை 25,999 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும். லேசல் நீலம், லேசர் பச்சை, லேசர் கிரே வண்ணங்களில் இந்த போன் சந்தைகளில் கிடைக்கப் பெறுகிறது.

ஃப்ளிப்கார்ட் மற்றும் சாம்சங் இந்தியா இணையதளங்களில் இந்த போனை நேரடியாக வாங்க முடியும். அது மட்டுமல்லாமல் ரிலையன்ஸ் டிஜிட்டல், ஜியோ ரீடெய்ல் ஸ்டோர்ஸ் உள்ளிட்ட கடைகளில் வரும் 22 ஆம் தேதி முதல் கிடைக்கும.

லான்ச் ஆஃபராக 3,000 கேஷ் பேக்கானது F62க்கு கொடுக்கப்படுகிறது. ஐசிஐசிஐ வங்கி கார்டு பயன்படுத்தி வாங்கினால் 2,500 ரூபாய் வரை கேஷ் பேக் கிடைக்கும். ஜியோ வாடிக்கையாளர்களுக்கு 7,000 ரூபாய் வரை சலுகைகள் கிடைக்கிறது.

Trending

Exit mobile version