தொழில்நுட்பம்

வாடிக்கையாளர்கள் பெரிதும் விரும்பிய ஸ்மார்ட்போனின் விலை குறைந்தது.. இப்போ வாங்கலாம்!

Published

on

இந்தியாவில் சாம்சங் ஏ31 ஸ்மார்ட்போனின் விலை குறைக்கப்பட்டுள்ளது.

சாம்சங் நிறுவனம் ஏ சீரிஸ் வரிசையில் ஏ31 என்ற ஸ்மார்ட்போனை கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிமுகம் செய்தது. அறிமுகத்தின் போது சாம்சங் ஏ31 ஸ்மார்ட்போனின் விலை 21,999 ரூபாய் என்று நிர்ணயிக்கப்பட்டது.  பின்னர் 19,000 ரூபாயாக குறைக்கப்பட்டது.

இந்த சாம்சங் ஏ31 ஸ்மார்ட்போன் வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து தற்போது விழாக்கால சலுகையாக 17,999 ரூபாய்க்கு குறைக்கப்பட்டுள்ளது.

இதில் ஆண்ட்ராய்டு 10 எனப்படும் ஆக்ஸிஜன் ஒஎஸ் இயங்குதளத்தில் இயங்குகிறது. மீடியாடெக் ஹீலியோ பி 65 SoC பிராசசர், 6ஜிபி ரேம், 48 மெகாபிக்சல் கேமரா, 5,000mAh  பேட்டரி உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் உள்ளன.

வாடிக்கையாளர் இதனை சாம்சங் ஆன்லைன் ஷாப்பிங் மற்றும் அமேசான் உள்ளிட்ட தளங்களில் வாடிக்கையாளர்கள் வாங்கிக் கொள்ளலாம். குறிப்பிட்ட வங்கியின் டெபிட் கார்டுகள் மூலம் ஸ்மார்ட்போன் வாங்குபவர்களுக்கு கூடுதல் சலுகைகள் உண்டு.

seithichurul

Trending

Exit mobile version