தமிழ்நாடு

போலீஸ் பாதுகாப்புடன் பாதயாத்திரை சென்ற துர்கா ஸ்டாலின்!

Published

on

தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்களின் மனைவி துர்கா ஸ்டாலின் போலீஸ் பாதுகாப்புடன் பாதயாத்திரை சென்ற புகைப்படங்கள் தற்போது வைரல் ஆகி வருகின்றன.

கடந்த மே மாதம் தமிழக முதல்வராக முக ஸ்டாலின் அவர்கள் பதவியேற்றதிலிருந்து அவரது குடும்பத்திற்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் முதல்வரின் மனைவி துர்கா ஸ்டாலின் வழக்கம்போல் தனது கோவில் சுற்றுலாக்களை சென்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் முதல்வர் முக ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் இரண்டு நாள் பயணமாக திருச்சியில் உள்ள ஆன்மீக தலங்களுக்கு சென்று வழிபட்டு வருகிறார். அவருடன் கேஎன் நேரு குடும்பத்தினர் உடன் இருந்ததாக தகவல்கள் வெளிவந்துள்ளன. முதல்கட்டமாக சமயபுரம் மாரியம்மன் கோயில், ஸ்ரீரங்கம், உறையூர் வெக்காளியம்மன் கோயில் ஆகிய கோயில்களுக்கு சென்று மனம் உருகி பிரார்த்தனை செய்த துர்கா ஸ்டாலின் பல்வேறு வேண்டுதல்களையும் நிறைவேற்றி உள்ளார்.

குறிப்பாக சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு அவர் பாதயாத்திரையாக சென்று தனது வேண்டுதலை நிறைவேற்றி உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. தமிழக சட்டமன்ற தேர்தல் பிரச்சாரம் நடந்தபோது திருச்சியில் திமுக மாநாடு நடந்தது அப்போது தனது கணவருடன் வந்திருந்த துர்கா ஸ்டாலின், தனது கணவர் தமிழக முதல்வராக பதவி ஏற்க வேண்டும் என்று சமயபுரம்மாரியம்மன் வேண்டிக் கொண்டதாகவும் அந்த வேண்டுதலை தற்போது அவர் நிறைவேற்றுவதாகவும் திமுக வட்டாரங்கள் கூறுகின்றன.

சென்னையில் இருந்து கார் மூலம் திருச்சி சமயபுரம் சுங்கச்சாவடி வரை வந்த துர்கா ஸ்டாலின் அங்கிருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் உள்ள சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு பாதயாத்திரையாக சென்றார். அவருக்கு பாதுகாப்பாக பாதுகாப்பாக காவல்துறை அதிகாரிகளும் உடன் நடந்து சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சமயபுரம் மாரியம்மன் கோயிலில் அவர் தனது குடும்பத்தினர் பெயரில் அர்ச்சனை செய்ததாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

Trending

Exit mobile version