சினிமா செய்திகள்

சமீரா ரெட்டிக்கு பெண் குழந்தை!

Published

on

கெளதம் மேனன் இயக்கத்தில் சூர்யா நடித்த வாரணம் ஆயிரம் படத்தில் அடியே கொல்லுதே என நடித்தவர் தான் சமீரா ரெட்டி, அதற்கு பிறகு அஜித்தின் அசல், விஷாலின் வெடி மற்றும் ஆர்யா – மாதவன் நடிப்பில் வெளிவந்த வேட்டை போன்ற படங்களிலும் நடித்த சமீரா ரெட்டி, தொழிலதிபர் அக்‌ஷய் வர்தாவை திருமணம் செய்து கொண்டு சினிமாவில் இருந்து ஒதுங்கி விட்டார்.

ஆனால், அவ்வப்போது, மாடலிங், போட்டோஷூட் என சமூக வலைதளங்களில் தனக்கான ஒரு ரசிகர் பட்டாளத்தை மெயிண்டெயின் செய்து வந்த சமீரா ரெட்டி, சமீபத்தில், நிறை மாத கர்ப்பிணியாக இருக்கும்போது, தண்ணீருக்கு அடியில் பிகினியில் போட்டோஷூட் நடத்தி அனைவரையும் மிரளவைத்தார்.

இந்நிலையில், சமீரா ரெட்டிக்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. ரசிகர்கள், பிரபலங்கள் என பலரும் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

seithichurul

Trending

Exit mobile version