இந்தியா

அனைவருக்கும் ஒரே கட்டணம்: மின்சார சீர்திருத்த சட்டம் விரைவில் என தகவல்!

Published

on

மின்சார கட்டணம் தற்போது வீடுகள் மற்றும் கமர்சியல் என இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டு கட்டணம் வசூலிக்கப்பட்டு வரும் நிலையில் இனி அனைவருக்கும் ஒரே கட்டணம் என தகவல் வெளிவந்து உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது,

மின்சார சட்டம் கடந்த 2003 ஆம் ஆண்டில் பல முக்கிய திருத்தங்களை செய்து புதிய திருத்த சட்ட வரைவை கடந்த 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் 14ஆம் தேதி மத்திய அரசு வெளியிட்டுள்ளது. கமர்சியல் மற்றும் குடியிருப்புகள் ஆகிய இரண்டுக்கும் இரண்டு வெவ்வேறு கட்டணம் என்ற நிலையாக இருந்த நிலையில் அனைவருக்கும் ஒரே யூனிட்டுக்கு ஒரே விலை என்ற நிலை ஏற்படும் என்று கூறப்பட்டது.

அதேபோல் மானியம் பெறும் நபர்களின் வங்கி கணக்குகளுக்கு மானியத்தை செலுத்திக் கொள்ளலாம் என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. விவசாயிகளுக்கு அதனால் பாதிப்பு ஏற்படாது என்று மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

அதுபோல் குடியிருப்பவர்கள் தங்களது வீட்டு மின் கட்டணத்தை செலுத்திய பிறகு அவர்களுக்கான மானியம் வீட்டு உரிமையாளரின் வங்கிக் கணக்குக்கு செல்லும் என்றும் மத்திய அரசு சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த சட்ட வரைவு விரைவில் அமல்படுத்த உள்ளதாக மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இந்த சட்ட வரைவு அமல்படுத்தப்பட்டால் வீடுகளுக்கு வழங்கப்படும் மின்சாரத்தின் கட்டணம் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. அதேபோல் கமர்சியல் குறைக்கப்படுமா என்பதையும் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

seithichurul

Trending

Exit mobile version