சினிமா

சாகுந்தலம் விமர்சனம்: கதை தான் பழசுன்னா.. VFX என்னடா விட்டலாச்சர்யார் காலத்து VFX-ஆ இருக்கே!

Published

on

இயக்குநர் குணசேகரன் இயக்கத்தில் சமந்தா, தேவ் மோகன், சச்சின் கடேக்கர், பிரகாஷ் ராஜ், மது, அதிதி பாலன், அரா உள்ளிட்ட பலர் நடித்துள்ள சாகுந்தலம் திரைப்படம் பல தடைகளை கடந்து இன்று ஒருவழியாக வெளியானது.

பாகுபலி, பொன்னியின் செல்வன் படங்களுக்கு பிறகு பல இயக்குநர்கள் புராண கால படங்களை இயக்க ஆர்வம் காட்டி வருகிறார். அப்படியொரு ஆர்வத்தை தான் இயக்குநர் குணசேகரன் சாகுந்தலம் படத்தின் மூலம் நிறைவேற்றி உள்ளார்.

#image_title

விஸ்வாமித்ரருக்கும் மேனகைக்கும் பிறந்த பெண் குழந்தையை மேனகை கனவ மகரிஷி ஆசிரமத்தில் விட்டு விட்டுச் செல்கிறார்.

கனவ மகரிஷியாக நடித்துள்ள சச்சின் கடேக்கர் மாற்றான் படத்தில் எல்லாம் வில்லனாக நடித்தாரே அவர் தான் இந்த படத்தில் சமந்தாவை எடுத்து வளர்க்கிறார்.

சகுந்தலா தேவியாக நடித்துள்ள சமந்தா இயற்கை சூழ அழகாக இருக்கும் அந்த ஆசிரமத்தில் வளர்கிறார். அந்த ஆசிரமத்தை தாண்டி வெளியுலகமே தெரியாத அவரை ஒரு நாள் அந்த பக்கமாக வேட்டைக்கு வந்த ராஜா துஷ்யந்தன் சந்திக்கிறார்.

#image_title

சகுந்தலாவின் கொள்ளை அழகை பார்த்து மயங்கி விடும் துஷ்யந்த் (தேவ் மோகன்) சகுந்தலாவிடம் தனது காதலை சொல்ல, இருவரும் ரகசியமாக தங்களுக்குள் திருமணம் செய்துக் கொண்டு குடும்ப வாழ்க்கையிலும் ஈடுபட்டு விடுகின்றனர்.

மீண்டும் ராஜ்யத்திற்கு செல்ல வேண்டும் என நினைத்த துஷ்யந்தா சகுந்தலாவை பார்க்க திரும்பி வரவே இல்லை. துஷ்யந்தனுக்கு காத்திருக்கும் சகுந்தலா அவன் நினைவாகவே இருக்கும் போது துர்வாச முனிவர் வருவதையும் அவர் அழைத்தும் செவி கொடுக்காமல் இருக்க அவர் கொடுக்கும் சாபம் காரணமாக துஷ்யந்தனுக்கு சகுந்தலாவின் நினைவுகள் மொத்தமாக அழிந்து விடுகின்றன.

#image_title

குடும்ப வாழ்க்கை நடத்திய பலனாக சகுந்தலா கர்ப்பம் தரித்த நிலையில், தனது வளர்ப்பு தந்தையிடம் அதைப் பற்றி சொல்கிறாள்.

பின்னர், துஷ்யந்தனை தேடி அவரது ராஜ்யத்துக்கு செல்லும் சகுந்தலா காதல் கொண்டது கந்தர்வ மணம் புரிந்தது என எதுவுமே தெரியாதவனாக இருக்கும் துஷ்யந்தனுக்கு தனது காதலை எப்படிச் சொல்லி புரிய வைக்கிறாள் என்பது தான் சாகுந்தலம் படத்தின் கதை.

கதையை படமாக்கிய விதத்தில் முதல் பாதி முழுக்க கதையை அப்படித்தான் சொல்ல வேண்டும் என்பதால் ரொம்பவே ஸ்லோவாக செல்லும் திரைக்கதையால் ரசிகர்கள் முதல் பாதியிலேயே பொறுமையை இழந்து விடுகின்றனர்.

மேலும், அந்த VFX காட்சிகள் கார்ட்டூன் படங்களை விட சுமாராக இருப்பது படத்திற்கு மிகப்பெரிய மைனஸ் ஆக மாறிவிடுகிறது. சமந்தா மட்டும் படத்தை முடிந்த வரை தனது நடிப்பால் தாங்கிப் பிடிக்க முயற்சித்தாலும், அவரது உழைப்பு பலனளிக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.

இந்த கதைக்கு பெரிய பட்ஜெட் ஒதுக்கி வேறலெவல் விஎஃபெக்ஸ் செய்தாலும், பெரிய ஆக்‌ஷன் காட்சிகளோ பாகுபலி போன்ற திரைக்கதையோ இல்லாத நிலையில், எந்த அளவுக்கு பட்ஜெட் அதிகம் கொட்டினால் கை கொடுக்கும் என்பதை அறிந்தே இப்படி சிம்பிளாக எடுத்து விட்டார்களா? என்கிற கேள்வியும் எழத்தான் செய்கிறது.

காதலின் ஆழத்தை உணர்த்தும் கதையாக இந்த படத்தை அணுகினால் சமந்தாவின் நடிப்புக்காக ஒரு முறை பார்க்கலாம். ஆனால், அதற்காக பல விஷயங்களை சகித்துக் கொள்ள வேண்டியது அவசியம். சாகுந்தலம் – சத்ய சோதனை!

ரேட்டிங்: 2/5.

seithichurul

Trending

Exit mobile version