சினிமா செய்திகள்

‘குக் வித் கோமாளி’ பவித்ராவுக்கு சமந்தா கொடுத்த வேற லெவல் பாராட்டு!

Published

on

‘குக் வித் கோமாளி’ டிவி நிகழ்ச்சி மூலம் கடந்த சில மாதங்களில் ரசிகர்கள் நெஞ்சை கொள்ளை கொண்ட அழகி பவித்ர லட்சுமி. குக் வித் கோமாளியில் புகழுடன் பவித்ரா அடித்த லூட்டிகள் மூலம் புகழின் உச்சிக்கே போனார் பவித்ரா.

அந்த ஷோ மூலம் தற்போது முதல் முறையாக கதாநாயகியாக அறிமுகமாக உள்ளார் பவித்ரா. அவர் கதாநாயகியாக நடிக்கும் திரைப்படத்தில் சதீஷ், ஹீரோவாக நடிக்கிறார். இந்தப் புதிய படத்திற்கான அறிவிப்பு சில நாட்களுக்கு முன்னர் வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் நல்ல ரீச் கிடைத்தது. இந்தப் பட வேலைகளில் பவித்ரா தற்போது பிஸியாக இருக்கிறார். 

இந்நிலையில் பவித்ரா, சமந்தாவைப் போலவே ஒப்பனைகள் செய்து தன் ட்விட்டர் பக்கத்தில் இரண்டு புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளனர். மேலும் சமந்தாவின் ட்விட்டர் கணக்கை டேக் செய்து, ‘சமந்தா மேம்… நான் இந்தப் புகைப்படங்களில் உங்களைப் போலவே இருக்கிறேனா. என்னுடைய ஃபேவரைட் படம் இது’ எனப் பதிவிட்டார். 

இதைப் பார்த்த சமந்தா, அந்தப் படத்தை ரீ-ட்வீட் செய்து, ‘யு லுக் பியூட்டிஃபுல்’ எனப் புகழ்ந்துள்ளார். இது இருவரின் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. 

Trending

Exit mobile version