சினிமா செய்திகள்

நயன்தாராவிற்கு சமமாக சம்பளத்தை உயர்த்திய சமந்தா!

Published

on

தென்னிந்திய நடிகைகளில் லேடி சூப்பர்ஸ்டார் என்று அழைக்கப்படும் நயன்தாரா 3 கோடி ரூபாய் சம்பளம் வாங்கி வருகிறார். இந்நிலையில், அவருக்கு போட்டியாக தற்போது நடிகை சமந்தாவும் தனது சம்பளத்தை 3 கோடிக்கு உயர்த்தி உள்ளாராம்.

நாக சைத்தன்யாவை திருமணம் செய்த பிறகும் நடிகை சமந்தா தொடர்ந்து தமிழ், தெலுங்கு மொழிகளில் பிசியாக நடித்து வருகிறார்.

தமிழை விட தெலுங்கில் சமந்தாவின் மார்க்கெட் உச்சம் பெற்றுள்ளது. சமீபத்தில் வெளியான ஓ பேபி படம் தெலுங்கில் பிளாக்பஸ்டர் அடித்த நிலையில், தனது சம்பளத்தை 2 கோடி ரூபாயில் இருந்து 3 கோடிக்கு மாற்றி உள்ளாராம் சமந்தா.

சமீபத்தில் நயன்தாராவிற்கு 10 கோடி ரூபாய் சம்பளத்துடன் ஒரு ஆஃபர் வந்தததாகவும் ஆனால், அவருடன் நடிக்க மாட்டேன் என நயன்தாரா மறுத்துவிட்டதாகவும் தகவல்கள் கசிந்து வருகின்றன.

மேலும், ரஜினியுடன் தர்பாரில் நடிக்கும் நயன்தாராவின் சம்பளம் 3 கோடிக்கும் மேல் என்ற பேச்சும் அடிபட்டு வருகின்றது.

seithichurul

Trending

Exit mobile version