சினிமா செய்திகள்

சமந்தாவின் ‘சாகுந்தலம்’ அட்டகாசமான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்!

Published

on

நடிகை சமந்தா நடித்த ‘சாகுந்தலம்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சற்றுமுன் வெளியாகியுள்ளது.

மகாகவி காளிதாஸ் என்பவர் எழுதிய புராணகதை சாகுந்தலம் என்ற கதை சிறு குழந்தை முதல் பெரியவர்கள் வரை அனைவரும் அறிந்திருப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த கதையின் நாயகியான சகுந்தலா கேரக்டரில் நடிகை சமந்தா நடித்து வருகிறார். இந்த படத்தில் சமந்தா, அதிதி பாலன், பிரகாஷ்ராஜ், மோகன்பாபு, மதுபாலா, கபீர் சிங் ஆகியோர் நடித்து வருகின்றனர் என்பதும் குணசேகரன் இந்த படத்தை இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சற்றுமுன் வெளியாகியுள்ள நிலையில் அந்த போஸ்டர் இணையதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த போஸ்டரில் நடிகை சமந்தாவின் தோற்றம் மிகவும் அழகாக இருப்பதாக ரசிகர்கள் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த படம் இன்னும் ஒரு சில மாதங்களில் ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Trending

Exit mobile version