இந்தியா

750 பேர்களுக்கு ரூ.3 லட்சம்: முதல்வரின் அறிவிப்புக்கு சமந்தா வாழ்த்து!

Published

on

750 பேருக்கு தலா 3 லட்சம் வழங்கப்படும் என முதல்வரின் அறிவிப்புக்கு நடிகை சமந்தா தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

கடந்த ஒரு வருட காலத்திற்கு மேலாக விவசாயிகள் புதிய வேளாண்மை சட்டத்தை எதிர்த்து போராட்டம் நடத்தினர் என்பதும், இந்த போராட்டத்தின் பயனாக சமீபத்தில் விவசாய சட்டம் ரத்து செய்யப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் விவசாய சட்டம் ரத்து செய்யப்பட்டதற்கு பல்வேறு கட்சி அரசியல் தலைவர்கள் விவசாயிகளின் போராட்டத்திற்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையில் விவசாயிகளின் போராட்டத்தின்போது தங்கள் உயிரை இழந்த 750 விவசாயிகளின் குடும்பத்திற்கு தலா ரூபாய் 3 லட்சம் வழங்கப்படும் என தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் அவர்கள் அறிவித்துள்ளார்.

அதுமட்டுமின்றி மத்திய அரசு ஒவ்வொரு விவசாயிகளின் குடும்பத்திற்கும் 25 லட்சம் நிவாரண நிதியாக வழங்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் விவசாயிகள் மீது பதிவு செய்யப்பட்ட அனைத்து வழக்குகளும் வாபஸ் பெற வேண்டும் என்றும் அவர் கோரிக்கை வைத்துள்ளார்.

இதுகுறித்த ட்வீட் ஒன்றிற்கு நடிகை சமந்தா கையெடுத்து கும்பிடும் எமோஜியை பதிவு செய்து தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

Trending

Exit mobile version