சினிமா செய்திகள்

ஆபாச உடை சர்ச்சையில் சிக்கிய சமந்தா!

Published

on

திருமணம் ஆன பின்பும் நடிகை சமந்தா திரைப்படங்களில் படுபிசியாக நடித்து வருகிறார். ஆனாலும், தமிழ் சினிமாவில் சமந்தாவுக்கு மிக பெரிய இடம் இதுவரை கிடைக்கவில்லை. தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தா, தமிழ், தெலுங்கு என இரட்டை குதிரை சவாரி செய்து சேஃப் ஜோனில் இருந்து வருகிறார்.

இந்நிலையில், அண்மையில் நடந்த ஓ பேபி படத்தின் நிகழ்ச்சி ஒன்றிற்கு வருகை தந்த நடிகை சமந்தா, அணிந்து வந்த சிகப்பு நிற ஆடை படு மோசமாகவும், ஆபாசமாகவும் இருந்ததாக மிகப்பெரிய சர்ச்சை கிளம்பியுள்ளது.

சமந்தாவிற்கு, நெட்டிசன்கள், சமூக வலைதளங்களில் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

தமிழ், தெலுங்கு என தென்னிந்திய மொழிப் படங்களில் தானே நடித்து வருகிறீர்கள், ஹாலிவுட் நாயகி போல, அங்கம் தெரியும் அளவிற்கு ஏன் உடை அணிந்து வருகிறீர் என கமெண்டுகள் வைரலாகி வருகின்றன.

சினிமா மற்றும் பேஷன் உலகில் இதெல்லாம் சர்வ சாதாரணம் என்றும், சமந்தா ஒரு பேஷன் விரும்பி என்பதால், இதுபோன்ற போல்ட்டான ஆடைகளை அணிந்து வருகிறார் என்றும் சமந்தாவின் ஆர்மி பதிலடி கொடுத்து வருகிறது.

seithichurul

Trending

Exit mobile version