சினிமா செய்திகள்

சென்னை பொண்ணு சமந்தாவுக்கு இன்று பிறந்தநாள்!

Published

on

நடிகை சமந்தாவின் 32வது பிறந்த தினம் இன்று. சமந்தாவின் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். பிரபலங்களும் நடிகை சமந்தாவுக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

அப்பா தெலுங்கு, அம்மா மலையாளி தான் பிறந்து வளர்ந்ததெல்லாம் தமிழ் நாட்டில் என்பதால், தென்னிந்திய கலவையாக மிளிரும் சமந்தா தன்னை பல்லாவரத்து தமிழ் பெண் என்றே அடையாளப்படுத்திக் கொள்கிறார்.

கல்லூரி படிக்கும் போதே மாடலிங் துறைக்குள் நுழைந்து நிறைய விளம்பரங்களிலும் நடித்த சமந்தா பின்னர் நாயகியாகி தமிழ், தெலுங்கு மொழிகளில் கலக்கி வருகிறார்.

சமீபத்தில் சமந்தா நடிப்பில் வெளியான சூப்பர் டீலக்ஸ் படத்தில் வேம்பா கதாபாத்திரத்தில் சமந்தா திறமையான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். அவரது நடிப்பை நியூயார்க் டைம்ஸ் பாராட்டியது.

சமந்தா, ராம்சரண் நடிப்பில் தெலுங்கில் வெளியான ரங்கஸ்தலம் படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. இந்த படத்தை ஞானவேல்ராஜா தமிழில் மொழிமாற்றம் செய்து வெளியிடுகிறார்.

seithichurul

Trending

Exit mobile version