சினிமா செய்திகள்

கர்பமாக இருப்பதால் படவாய்ப்புகளை தவிர்கிறாரா சமந்தா?

Published

on

தமிழ், தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை சமந்தா கர்பமாக இருப்பதாக தெலுங்கு சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது.

திருமணத்திற்கு பிறகும் கூட பல படங்களில் நடித்துவரும் சமந்தா மஜிலி, ஓ பேபி படங்களை தொடர்ந்து தற்போது தமிழில் உருவான 96 படத்தின் ரீமேக்கில் நடித்துவருகிறார்.

இவ்வாறு சமந்தா புகழ் உயர்ந்து நிற்பதால் பல இயக்குனர்கள் அவரிடம் கதை சொல்லி அவர்களது படத்திற்கு அழைத்தனர். ஆனால் புதிதாக எந்த படங்களிலும் நடிக்க முன்வரவில்லை சமந்தா. 96 படத்தை அடுத்து அவர் அமேசான் தயாரிக்கும் வெப்சீரிஸ் ஒன்றில் நடிக்கவுள்ளதாக கூறப்பட்டிருந்தது.

ஆனால் தற்போது அவர் கர்பமாக இருப்பதாகவும் அதனால் பட வாய்ப்புகளை தவிர்பதாகவும் தெலுங்கு சினிமா வட்டாரங்கள் பேசி வருகிறது. ஆனால் இது குறித்து சமந்தா இது வரை எந்த விளக்கமும் அளிக்கவில்லை.

seithichurul

Trending

Exit mobile version